India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
WAY2NEWS பயனர்களின் பொது அறிவுக்கான நாட்டு நடப்புகள் குறித்து தினமும் வீடியோ வடிவில் செய்தி வெளியிடப்படும். தினமும் ஒரு தலைப்பில் வெளியாகும் செய்திகள் TNPSC, SSC, IBPS, RRB போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். Way2News வாட்ஸாப் குழுவை பின் தொடர இந்த <
உத்தர பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற, அலகாபாத் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த தீர்ப்பால் 17 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கருத்து தெரிவித்துள்ளது. முன்னதாக உ.பி., மதரஸா கல்வி வாரிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அலகாபாத் ஐகோர்ட் நீதிமன்றம் கூறியிருந்தது.
தமிழகத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.4,475 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.80 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையாகி வருகிறது. கடந்த மார்ச்சில் பீர் வகைகள் ரூ.621 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.3,854 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.
2025ஆம் ஆண்டு இறுதிக்குள் யூரியா இறக்குமதியை இந்தியா நிறுத்துமென மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்துள்ளார். மேலும் அவர் ‘கடந்த 65 ஆண்டுகளாக ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகிறோம். தற்போது, ரசாயன உரங்களுக்கு மாற்றாக நானோ லிக்விட் யூரியா மற்றும் லிக்விட் டி அம்மோனியம் பாஸ்பேட்டை பயன்படுத்த ஊக்குவித்து வருகிறோம். இந்தியாவின் யூரியா உற்பத்தி திறனை 310 லட்சன் டன்களாக அதிகரித்துள்ளோம்’ என்றார்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்திக் காட்டுவோம் என ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த அவர், இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்ததைப்போல ஊடகங்களில் காண்பிக்கப்படுவதாகக் கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் ஊடகத்தால் ஏற்படுத்தப்பட்ட அதே உணர்வுதான் தற்போதும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மின் நுகர்வில் தமிழ்நாடு நேற்று (04.04.2024) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 44.08 கோடி யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு நுகர்ந்துள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி 43.58 கோடி யூனிட்கள் நுகரப்பட்டதே இதுவரையிலான சாதனையாக இருந்தது. இந்த அளவிலான மிக அதிக மின் தேவையையும் சமாளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிற்குள் 2019இல் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் குறித்து ராஜஸ்தானில் நடந்த பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது அவர், பாலகோட்டில் தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகளுக்கு விமானப்படை பாடம் கற்று கொடுத்ததாகவும், அதற்கு காங்கிரசும், அதன் கூட்டணியும் ஆதாரம் கேட்டதென்றும் விமர்சித்தார். நாட்டையும், வீரர்களையும் அவமதிப்பதே காங்கிரஸின் அடையாளம் என்று மோடி கூறினார்.
நடிகை அமலாபாலுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா முடிந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால், ஜெகத் தேசாய் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், கேரளாவில் உள்ள வீட்டில் முக்கிய உறவினர்கள் முன்னிலையில் அவருக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இது தொடர்பான போட்டோவை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக ஷிவமோகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகியிடம்
என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. மார்ச் 1இல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த 10 நாள்களுக்கு முன்னர், என்.ஐ.ஏ அதிகாரிகள், பல்வேறு வீடுகள், கடைகளில் சோதனை நடத்தினர். அதில், மொபைல் கடை வைத்திருந்த இருவர் அளித்த தகவலின் பேரில், பாஜக நிர்வாகியிடம் விசாரித்து வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரின் சொத்து மதிப்பு, 10 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014 தேர்தலின்போது ₹23 கோடி, 2019 தேர்தலில் ₹35 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக அவர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ₹55 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இது 2014 சொத்து மதிப்பை விட 2 மடங்கு அதிகம்.
Sorry, no posts matched your criteria.