News May 6, 2024

மக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம்

image

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்காக தான் உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும், தான் மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும் கூறினார். மேலும், மக்களுக்கு சேவை செய்வதையே தர்மமாகக் கொண்டு உழைத்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

News May 6, 2024

வரலாற்றில் இன்று: மே 6

image

➤1854 – இந்தியாவில் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
➤1861 – இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேரு பிறந்த நாள்
➤1945 – இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராகா நகரில் ஆரம்பமானது.
➤1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.
➤2021 – தமிழ் திரைப்பட காமெடி நடிகர் பாண்டு நினைவு தினம்

News May 6, 2024

தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் கைது

image

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தண்டவாள உதவி வழங்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து சோதனை நடைபெற்றுவரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

News May 6, 2024

இதனால்தான் மோசமாக தோல்வியுற்றோம்

image

ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது. தோல்வி குறித்துப் பேசிய LSG கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு மிக மோசமாக இருந்தது என்றார். அதுமட்டுமின்றி பவர்பிளேயில் நரைன் கொடுத்த அழுத்தத்தை சமாளிக்க முடியாததே மோசமான தோல்விக்குக் காரணம் என்றார்.

News May 6, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 140 ▶குறள்: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். ▶பொருள்: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

News May 6, 2024

பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பிரதமர் பிரசாரம்

image

மகளிரை பாதுகாக்க வேண்டும் எனக் கூறும் பிரதமர் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பிரஜ்வால் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விவகாரத்தில் பிரதமர் மோடியைத் தாக்கியுள்ளார். யார் எங்கு சென்றாலும் தெரிந்து வைத்திருக்கும் மோடி, பிரஜ்வால் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றது தெரியாதது போல நடிக்கிறார் என்றார்.

News May 6, 2024

நீட் தேர்வு எளிதாக இல்லை

image

நீட் நுழைவுத் தேர்வில் NCERT பாடப் புத்தகத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நேற்று நடந்த இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை 25 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், வினாத்தாள் எதிர்பார்த்த அளவுக்கு எளிதாக இல்லை என்றும், இயற்பியல் பாடக் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

News May 6, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 6, 2024

சுனில் நரைன் புதிய சாதனை

image

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் கொல்கத்தா அணி வீரர் நரைன் ஐபிஎல்லில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். அதாவது கொல்கத்தா அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் (16) விருதை வென்றவர்கள் பட்டியலில் ரசலுடன் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இவர்களுக்கு அடுத்தபடியாக கவுதம் காம்பிர் 10 முறையும், யூசுப் பதான் 7 முறையும் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

News May 6, 2024

தாக்குதல் நடத்தியதாக பாஜக மீது புகார்

image

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திரிணாமுல் காங்., வேட்பாளர் மிதாலி பாக் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரது கார் கண்ணாடி சேதமடைந்த நிலையில், பாஜகவினர் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து மேற்கு வங்க பாஜகவினர் மீது திரிணாமுல் காங்., கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!