India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. டிராவிஸ் ஹெட், அபிஷேக், மார்க்ரம் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெற செய்தனர். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.
சனி பகவானின் சொந்த ராசியான கும்பத்தில் தற்போது செவ்வாய் பகவானும் நுழைகிறார். இதனால் கன்னி, விருச்சிகம், தனுசு, கும்ப ராசியினருக்கு ராஜயோகம் காத்திருக்கிறது. தொழிலில் இரட்டிப்பு லாபம், புதிய தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பு, திருமண வரன் தேடி வந்து அமைவது, குழந்தை பாக்கியம், வெளிநாடு செல்லும் யோகம், அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் போன்ற பல்வேறு சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.
நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ப.சிதம்பரமும், ராகுல் காந்தியும் தான் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் திமுக அரசு சுணக்கம் காட்டுவதாகக் கூறிய அவர், மக்களின் பிரச்னைகளை தீர்க்க பாஜகவால் மட்டுமே முடியும் என அவர்கள் நம்புவதாக தெரிவித்தார். முன்னதாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை இரட்டிப்பாகியுள்ளதாக ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து குல்தீப் யாதவ் வெளியேற உள்ள தகவலால் டெல்லி அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். PBKS, RR அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் CSK, KKR அணிகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், அவருக்கு தொடர் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது.
மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த கார்த்திக், திடீரென உயிரிழந்திருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இட்லி கார்த்திக் என்ற பெயர் கொண்ட இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக சிறையில் விசாரணை கைதியாக இருக்கும் இவர், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத், சமீபத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என்று பேசியிருந்தார். இதனை நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியபின், தற்போது ஒரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். 1943ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து தன்னைத் தானே பிரதமராக சுபாஷ் சந்திர போஸ் அறிவித்துக் கொண்டதை சுட்டிக் காட்டியிருக்கும் கங்கனா, அதைதான் குறிப்பிட்டதாக சமாளித்து வருகிறார்.
தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் எஸ்.பி.ஐ வங்கி கமிஷனாக ₹10.68 கோடியை பெற்றுள்ளதாக ஆர்.டி.ஐ தகவலில் தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு முன்னர் 2018 முதல் 2024 வரை 30 முறை தேர்தல் பத்திரங்களை விற்கவும், அதனை ரொக்கமாக மாற்றவும் வங்கி கட்டணம், பரிவர்த்தனை கட்டணத்துடன் அதற்கான 18% ஜி.எஸ்.டியுடன், மத்திய நிதியமைச்சகத்திடம் எஸ்.பி.ஐ வசூலித்துள்ளது.
சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை திருத்திய தேர்தல் அதிகாரி அனில் மசிஹ், உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப்புக்கு பதிலாக பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக முடிவுகளை மாற்றி அறிவித்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இன்றைய தேதியில் உடல் பருமன் தவிர்க்க முடியாத பிரச்னையாகியிருக்கிறது. ஆனால், உடல் எடையை குறைக்கத் தேவையான அடிப்படை விதிகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரையை முற்றிலுமாக நிறுத்துதல், மாவுச்சத்து உள்ள உணவுகளை குறைத்தல், அதிக நீரை பருகுதல், நார்ச்சத்து கொண்ட உணவினை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றை செய்தால் ஒரே வாரத்தில் உடலில் மாற்றங்கள் தென்படும்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவிக்காதது ஏன்? என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வை மாநில அரசு விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது தேர்தலுக்காக மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர், மக்களை ஏமாற்றும் செயல் இது என விமர்சனம் செய்தார். மேலும், கச்சத்தீவு பிரச்னைக்கு திமுக-காங்கிரஸ் தான் காரணம் என சாடினார்.
Sorry, no posts matched your criteria.