News April 6, 2024

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்

image

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான் செய்த முட்டாள் தனத்தால் தப்பான வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். அதனால் நான் சாக போகிறேன். இது என்னோட முடிவு தான். என்னை யாரும் தேட வேண்டாம்” என்று கூறியிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

News April 6, 2024

பெண்களுக்கு தனித்தொகுதி ஒதுக்க வேண்டும்

image

மக்களவைத் தோ்தலில் பெண்களுக்கு தனித்தொகுதி ஒதுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “மக்கள்தொகை 30 கோடியாக இருக்கும் போது 543 மக்களவைத் தொகுதிகள் இருந்தன. தற்போது 130 கோடியை தொட்ட பின்பும், அதே 543 தொகுதிகள்தான் உள்ளன. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு தனித்தொகுதி இருப்பது போன்று பெண்களுக்கும் தனித்தொகுதி ஒதுக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.

News April 6, 2024

அம்பேத்கர் பொன்மொழிகள்

image

✍உன் அடிமை என்று என்னை நினைக்கும் போது, உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை. ✍ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதை அடைவதற்காக உழைத்து முன்னேறுங்கள். ✍கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது. ✍மகாத்மாக்கள் வந்தார்கள், மறைந்தார்கள். ஆனால், தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது. ✍கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து.

News April 6, 2024

‘தலைவர் 171’ படத்தில் இணையும் ரன்வீர் சிங்?

image

‘தலைவர் 171’ படத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் வெளியான ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரஜினி ‘கேங்ஸ்டர்’ வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

News April 6, 2024

CSK தோல்விக்கு இதுதான் காரணம்

image

பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்தது தான் தோல்விக்கு முக்கிய கரணம் என CSK கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், “எதிரணியினர் நன்றாகவே பந்துவீசினர். அதனால் எதிர்பார்த்த ரன்களை எங்களால் குவிக்க முடியவில்லை. ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். ஒரு கேட்ச் வாய்ப்பை விட்டு விட்டோம். இருப்பினும், 19ஆவது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றோம்” எனத் தெரிவித்தார்.

News April 6, 2024

கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்

image

புதிய மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக பல மடங்கு வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், கூடுதல் கட்டணத்தை சம்பந்தபட்ட மின் நுகர்வோரின் கணக்கில் திருப்பி செலுத்தி, அவா்களின் அடுத்தடுத்த பில் தொகையுடன் அதை இணைத்து சரி செய்து கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2024

ஏப்ரல் 6: வரலாற்றில் இன்று

image

1580 – இங்கிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1712 – நியூயார்க்கில் அடிமைகள் கிளர்ச்சி தொடங்கியது.
1869 – செல்லுலாய்டு கண்டுபிடிக்கப்பட்டது.
1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தார்.
1979 – நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்டம் நடந்தது.

News April 6, 2024

அண்ணாமலை பற்றி உதயநிதி பகீர் விமர்சனம்

image

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “அண்ணாமலை பெயரை எல்லாம் சொல்ல வேண்டாம். அந்தளவுக்கு அவர் மதிப்பு கிடையாது. அவர் ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு சமம்” என திமுக தொண்டர்களைப் பார்த்துக் கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சிற்கு, பாஜகவினர் பலர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

News April 6, 2024

எனக்கு இது 5ஆவது திருமணம்

image

எனக்கு திருமணம் என்று பரவி வரும் வதந்திகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகை அஞ்சலி திட்டவட்டமாக கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “வதந்திகள் மூலம் இதுவரை 4 முறை எனக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது எனக்கு 5ஆவது திருமணம். நிச்சயமாக எனக்கு திருமணம் நடக்கும். ஆனால், இப்போது இல்லை. EMI-கள் நிறைய இருப்பதால், திருமணம் செய்யும் எண்ணம் தற்போது இல்லை” என்று கூறினார்.

News April 6, 2024

IPL: அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ்

image

காயத்தில் இருந்த குணமடைந்த சூர்யகுமார் யாதவ், இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு, நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 வீரரான சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பியுள்ளார். டெல்லிக்கு எதிரான நாளைய போட்டிக்காக சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!