News August 19, 2025

தலைமை தேர்தல் கமிஷனரை குறிவைக்கும் எதிர்கட்சிகள்

image

‘வாக்கு திருட்டு’ தொடர்பாக காங்., – EC இடையே வார்த்தைப்போர் நீடிக்கிறது. இந்நிலையில் பார்லிமென்டில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானவேல் குமாருக்கு எதிராக, பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த தீர்மானம் நிறைவேற்ற, இரு சபைகளிலும், மூன்றில் இரண்டு பங்கு M.P.க்கள் ஆதரவு தேவை ஆனால் எதிர்கட்சிகளிடம் அந்த பலமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News August 19, 2025

சிபிஆர்-ஐ தேர்வு செய்ய உதவியவர்கள் யார்?

image

துணை ஜனாதிபதி பதவிக்கு சிபிஆர்-ஐ தேர்வு செய்ய இபிஎஸ், வெங்கய்யா நாயுடு உதவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், 2024 லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி அமைய சிபிஆர் முக்கிய பங்கு ஆற்றியதாலும், நல்ல நட்பின் காரணமாகவும், அவரது பெயரை வெங்கய்யா நாயுடு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. தமிழகம் வந்த அமித்ஷாவிடம் இபிஎஸ்-யும் பரிந்துரைத்ததால் தற்போது அவர் தேர்வானதாக கூறப்படுகிறது.

News August 19, 2025

திருமாவளவன் கருத்துக்கு சிபிஎம் எதிர்ப்பு

image

பணிநிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருப்பதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதுபற்றி பேசிய சிபிஎம்யை சேர்ந்த சண்முகம், 240 நாட்கள் பணிசெய்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே சட்டம் என்றும், அதனை நடைமுறைப்படுத்த தொழிற்சங்கங்கள் கூறுவதாக தெரிவித்தார். பணிபாதுகாப்புடன், வருமானமும் சேர்ந்தால் அடுத்த தலைமுறை இந்த பணியில் இருந்து விடுவிக்க உதவும் என்றார்.

News August 19, 2025

ஜெலென்ஸ்கி-புடின் சந்திப்பு: ஏற்பாடு செய்யும் டிரம்ப்

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இது பற்றி டிரம்ப் வெளியிட்ட X பதிவில், புடினுடன், ஜெலன்ஸ்கி ஆலோசனை நடத்தும் வகையில் சந்திப்பு ஒன்று ஏற்படுத்தி தரவுள்ளதாகவும், இதற்கான இடம் பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதன் பின் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் பங்கேற்கும் வகையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

ஆகஸ்ட் 19: வரலாற்றில் இன்று

image

1931 – ஜி. கே. மூப்பனார் தமிழக அரசியல்வாதி
1977 – சுபலட்சுமி, வங்காளத் திரைப்பட நடிகை.
186வது உலக புகைப்பட தினம்.
1978 – ஈரானில் திரையரங்கு ஒன்று தீப்பிடித்ததில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1980 – சவூதி அரேபியா ரியாத் நகரில் விமானம் தரையில் மோதித் தீப்பிடித்ததில் 301 பேர் உயிரிழந்தனர்.
2013 –பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.

News August 19, 2025

பாலியல் ரீதியாக அச்சுறுத்தல்: நடிகை ரம்யா புகார்

image

குத்து, பொல்லாதவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் ரம்யா. ரசிகரை கொலை செய்த வழக்கில் தர்ஷன் சம்பந்தப்பட்டிருப்பதை விமர்சித்து ரம்யா கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தர்ஷனின் ரசிகர்கள் அவரை இணையத்தில் பாலியல் ரீதியாக அச்சுறுத்துவதாகவும், 43 சமூக வலைதள கணக்குகள் ஒப்படைத்து அவர்கள் மீது நடவடிக்கைக் கோரியும் புகாரளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் 7 பேர் கைதாகியுள்ளனர்.

News August 19, 2025

அதிமுக அரசை விமர்சித்த சசிகலா

image

தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியில் 10 மண்டலங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்கு தனியாருக்கு டெண்டர் விட்டது தவறு என்றார். இந்த விவகாரத்தில் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவர் மறைவுக்கு பின் பல மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.

News August 19, 2025

உசைன் போல்ட் பொன்மொழிகள்

image

* பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள்.
* உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும்.
* மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.
* உங்களை நீங்களே கடினமாகத் தள்ளிக்கொள்ள இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். ஆசைதான் வெற்றிக்கு முக்கியமாகும்.

News August 19, 2025

11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கர்நாடகாவில் மழைத் தீவிரமடைந்துள்ளதால் KRS, கபினி அணைகளிலிருந்து 95,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு விரைவில் வரத்தொடங்கி இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனால் உபரிநீர் எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படலாம். இதனால் சேலம் உள்ளிட்ட காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News August 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 432 ▶குறள்: இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. ▶ பொருள்: மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

error: Content is protected !!