India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதங்கள் பின்வருமாறு:
▶அரசுப் பள்ளிகள் – 91.02%
▶அரசு உதவிப் பெறும் பள்ளிகள் – 95.49%
▶தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.70%
▶இருபாலர் பள்ளிகள் – 94.78%
▶பெண்கள் பள்ளிகள் – 96.39%
▶ஆண்கள் பள்ளிகள் – 88.98%
+2 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த பொதுத்தேர்வில் சென்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 23,957ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 26,352 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். அதன்படி, தமிழ் – 35, ஆங்கிலம் – 7, கணிதம் – 2,587, இயற்பியல் – 633, வேதியியல் – 471, உயிரியல் – 652 மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் +2 தேர்வில் 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், கடந்த ஆண்டை போலவே, மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,52,165 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,25,305 பேர் (92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,08,440 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 3,93,890 பேர் (96.44%), மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் (100%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை சற்றுமுன் வெளியிட்டது. அதன்படி 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்த ஆண்டு 326 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருந்தன. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2478 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்கும் முயற்சிக்கு இந்த முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளன.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. கடந்த மார்ச் மாதம் நடந்த இத்தேர்வை 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இரு இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியல் தேவைப்படும் மாணவர்கள் இன்றே பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம்.
மணிப்பூரின் பல பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால், வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. பலத்த காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால், வீடுகளும் சேதமாகியுள்ளன. இந்நிலையில், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவித்துள்ள மாநில அரசு, பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
சமீப காலமாக, குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், வீடுகளில் செல்லப் பிராணி வளர்ப்பவர்களும் மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் அவற்றை கவனமாக வளர்ப்பது அவசியமாகிறது. அதேபோல், நாய் தொல்லை அதிகமுள்ள பகுதிகளில், குழந்தைகளை வெளியே தனியாக அனுப்புவதை பெற்றோர் தவிர்ப்பது நல்லது.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக, கடந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை மாவட்ட வாரியாகத் தேர்வு செய்து பரிசுகள் வழங்கினார். இந்நிலையில், நடப்பு ஆண்டிலும் அவர் பரிசுகள் வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் 400மீ தொடர் ஓட்டத்திற்கான இந்திய அணிகளில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். உலக தொடர் ஓட்டப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்ததால், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் 4*400 மீட்டர் தொடர் ஓட்ட அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அதில், ஆடவர் அணியில் தமிழகத்தின் ஆரோக்ய ராஜிவும், மகளிர் அணியில் தமிழகத்தின் சுபா வெங்கடேஷ் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதால், மாணவர்கள் மத்தியில் மேற்படிப்பு குறித்தத் தேடல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், துறையின் எதிர்காலம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டுமென கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். மருத்துவம், பொறியியல் என பொது நீரோடையில் கலக்காமல், கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தினால், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.