India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணிரத்னம் இயக்கும் கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்னையால் துல்கர் இப்படத்தில் இருந்து விலகியதால், அவருக்குப் பதிலாக சிம்பு நடித்து வருகிறார். ஜெயம் ரவியும் விலகியதால், அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியுள்ளன. மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணியாற்றி வருபவரின் 5 வயது மகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது, ராட்வீலர் வகை வளர்ப்பு நாய்கள் சிறுமியை கடித்ததோடு, அவரை மீட்க வந்த தாயையும் கடித்து குதறின. பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்வெட்டை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பல்வேறு மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், மக்கள் அவதிப்படுவதாகவும், நிலுவையில் உள்ள மின் திட்டங்களை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அதிக வெப்ப அலைக்கான ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராயலசீமா, தெலங்கானா, கர்நாடகாவில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 அணிகள் 11 போட்டிகளிலும், 2 அணிகள் 10 போட்டிகளிலும் விளையாடியுள்ளன. இதை வைத்து ஒவ்வொரு அணிகளுக்கும் ப்ளே ஆஃப்க்கு செல்ல எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது என கிரிக்ட்ராக்கர் இணையம் கணித்துள்ளது. இதன்படி ராஜஸ்தான் 99%, கொல்கத்தா 99%, ஹைதராபாத் 60%, சென்னை 51%, லக்னோ 45%, டெல்லி 19%, பஞ்சாப் 15%, பெங்களூர் 10%, குஜராத் 1.9%, மும்பை 0.1% வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷா, மே 4ஆம் தேதி தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும், சாய் பாபா புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
உலகளவில் இந்தியாவின் அடையாளமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மாறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் 1200 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்தியர்கள் மேற்கொள்வதாகவும், இதற்கு நேர்மாறாக அமெரிக்கா ஒரு வருடத்தில் 400 கோடி அளவிலே டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதாகவும் கூறினார். இதுகுறித்து பல நாடுகள் இந்தியாவுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் சீட் தராமல் புறக்கணிக்கப்பட்டதால் காங்., மீது அதிருப்தியில் இருக்கும் திருச்சி எம்பி திருநாவுக்கரசர், பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவில் இணைந்தால், அவருக்கு “ராஜமரியாதை கிடைக்க நான் பொறுப்பு” என EX மினிஸ்டர் சி.விஜயபாஸ்கர் தூது விட்டுள்ளாராம். இதனால், அதிமுகவில் இணைவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் திருநாவு.
தமிழகத்தில் ராமரின் புகழ் பாடும் ஆலயங்களுள் முக்கியமானது கும்பகோணம் ‘குடந்தை ராமசாமி’ கோயில். இதுவே,‘தென்னக அயோத்தி’ எனப்படுகிறது. இங்கு வணங்கினால் இழந்த சொத்து, பதவி, செல்வம், சொந்தங்கள் என அனைத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆலயத்தின் சிறப்பாக, ஸ்ரீராமரும் சீதா பிராட்டியும் ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி தருகின்றனர். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றுசேர்தல் போன்ற வரங்களுக்கு ஏற்ற தலம் இதுவாகும்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது தீவிரவாத தாக்குதல் அல்ல, தேர்தலுக்காக பாஜக நடத்தும் நாடகம் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விமர்சித்துள்ளார். தேர்தல் நடைபெறும் போதெல்லாம் இத்தகைய நாடகத்தை பாஜக அரங்கேற்றி வருவதாகக் கூறிய அவர், இந்த தாக்குதலில் எந்த உண்மையும் இல்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.