India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழகம் முதல் 94.56% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில், கணினி அறிவியல்-6996, கணிதம்-2587, வணிகம்-3299, வணிகவியல்-6142, கணக்குப்பதிவியல்-1647, கணினி பயன்பாடுகள்-2251 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல், இம்முறை, 26,352 பேர் எதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 2022-2023ஆம் கல்வியாண்டில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் 90 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களும் 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்றிருக்கின்றன.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.45% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.42% தேர்ச்சி பெற்று சிவகங்கை, ஈரோடு மாவட்டங்கள் 2ஆவது இடமும், 97.25% பெற்று அரியலூர் 3வது இடமும், 96.97% பெற்று கோவை 4வது இடமும், 96.44% தேர்ச்சி பெற்று நெல்லை, பெரம்பலூர் மாவட்டங்கள் 5வது இடமும் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு, விருதுநகர் 97.85% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு பல மாவட்டங்களில் மாணவர்கள் 90%-க்கும் கீழ் தேர்ச்சியான நிலையில், இம்முறை அனைத்து மாவட்டங்களுமே 90% மேல் தேர்ச்சி அடைந்துள்ளனர். 90.47% பெற்று திருவண்ணாமலை மாவட்டம் குறைந்தபட்ச தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. கடந்தாண்டு ராணிப்பேட்டை மாவட்டம் 87.30% பெற்றதே குறைந்த தேர்ச்சி விகிதமாகும்.
* அறிவியல் பாடப்பிரிவுகள் 96.35%
* வணிகவியல் பாடப் பிரிவுகள் 92.46%
*கலைப் பிரிவுகள் 85.67%
* தொழிற்பாடப் பிரிவுகள் 85.85%
இயற்பியல் பாடத்தில் 98.48% பேர்
வேதியியல் பாடத்தில் 99.14% பேர்
உயிரியல் பாடத்தில் 99.35% பேர்
கணிதம் பாடத்தில் 98.57% பேர்
தாவரவியல் பாடத்தில் 98.86% பேர்
விலங்கியல் பாடத்தில் 99.04% பேர்
கணினி அறிவியல் பாடத்தில் 99.80% பேர்
வணிகவியல் பாடத்தில் 97.77% பேர்
கணக்குப்பதிவியல் பாடத்தில் 96.61% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு +2 பொதுத்தேர்வில் 8,03,385 பேர் தேர்வெழுதிய நிலையில், இந்தாண்டு 7,60,606 பேர் தேர்வெழுதினர். கடந்த ஆண்டு 7,55,451 (94.03%) தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 7,19,196 (94.56%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாணவியர் 4,05,753 (96.38%), மாணவர்கள் 3,49,697 (91.45%) தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு மாணவியர் 3,93,790 (96.44%), மாணவர்கள் 3,25,305 (92.37%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதங்கள் பின்வருமாறு:
▶அரசுப் பள்ளிகள் – 91.02%
▶அரசு உதவிப் பெறும் பள்ளிகள் – 95.49%
▶தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.70%
▶இருபாலர் பள்ளிகள் – 94.78%
▶பெண்கள் பள்ளிகள் – 96.39%
▶ஆண்கள் பள்ளிகள் – 88.98%
+2 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த பொதுத்தேர்வில் சென்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 23,957ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 26,352 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். அதன்படி, தமிழ் – 35, ஆங்கிலம் – 7, கணிதம் – 2,587, இயற்பியல் – 633, வேதியியல் – 471, உயிரியல் – 652 மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் +2 தேர்வில் 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், கடந்த ஆண்டை போலவே, மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,52,165 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,25,305 பேர் (92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,08,440 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 3,93,890 பேர் (96.44%), மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் (100%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.