India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்தும் அவரது ஓய்வு குறித்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் தோனியை விமர்சித்திருக்கிறார். “தோனி 9ஆவது வீரராக களமிறங்கப் போகிறார் என்றால் அவருக்குப் பதில் பவுலர் ஒருவரை அணியில் எடுக்கலாம். முன் வரிசையில் களமிறங்க முடியாது என்றால் விளையாடாமலே இருக்கலாம்” என்று அவர் கூறியது பேசுபொருள் ஆகியிருக்கிறது.
பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா, டைட்டன் நிறுவனத்தில் 5.35 சதவீத பங்குகளை வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது பங்கின் மதிப்பு ₹16,792 கோடியாக இருந்தது. இந்நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, டைட்டனின் பங்கு மதிப்பு எதிர்பாராத விதமாக 5%-க்கு மேல் சரிந்தது. இதனால், அவரின் பங்கு மதிப்பு சில நிமிடங்களில் ₹800 கோடியை இழந்தார்.
ஒடிசா செல்வ வளம் மிகுந்த மாநிலமாக இருக்கும்போது, அதன் மக்கள் ஏழைகளாக இருக்க காங்கிரசும், பிஜு ஜனதா தளமும்தான் காரணம் என பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். பெஹ்ராம்பூரில் பிரசாரம் செய்த அவர், பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க வந்ததாகத் தெரிவித்தார். ஜூன் 4ஆம் தேதி பிஜு ஜனதா தள ஆட்சி காலாவதியாகும் எனவும், ஜூன் 10ஆம் தேதி பாஜக முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்றும் அவர் கூறினார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படபிடிப்பு டெல்லியில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடிகர்கள் சிம்பு, நாசர், வையாபுரி, அபிராமி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். டெல்லியில் பிரபல ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பில், பாலிவுட் நடிகர்கள் அலி ஃபசல், சான்யா மல்ஹோத்ரா, பங்கஜ் திருப்பதி ஆகியோர் இணைய உள்ளனர். மே 11ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை (மே 7) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரிலும், நாளை மறுநாள்( மே 8) தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், இதர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தெற்கு கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கையை மீறி கடல் பகுதிக்குச் சென்ற 8 பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் லெமூரில் 5 மாணவர்கள், தேங்காய்பட்டணத்தில் சிறுமி, குளச்சலில் 2 இளைஞர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
IND-BAN அணிகளுக்கு இடையேயான மகளிர் 4ஆவது டி20 போட்டி, இன்று மதியம் 3.30 மணிக்கு வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஷஃபாலி வர்மா அரை சதம் உள்பட 82 ரன்களும், ராதா யாதவ் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளனர். அபாரமாக விளையாடி வரும் இந்திய அணி, வெற்றியைத் தொடருமா?
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், பிணை வழங்க கோரியும் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை மே 15க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ED சார்பில் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்ததற்கு, செந்தில் பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ED கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை மீறி, குமரி கணபதிபுரம் அருகே கடலில் இறங்கி குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சென்னை, திருச்சியை சேர்ந்த 12 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் குமரிக்கு சுற்றுலா சென்றபோது கடலில் குளித்தனர். இவர்களில் 6 பேரை அலை இழுத்துச் சென்றது. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பழனியை அடுத்த நெய்க்கரப்பட்டி பி.ஆர்.ஜி. மெட்ரிக் பள்ளி மாணவி அப்சரா 600-க்கு 592 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். பொருளாதாரம், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு ஆகிய 4 பாடங்களில் 100/100 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 96 மதிப்பெண்களை மாணவி அப்சரா பெற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.