India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென் மாநிலங்களில் பெரிய வெற்றியை பாஜக எதிர்பார்த்திருந்த நிலையில், கர்நாடகாவில் பிரஜ்வால் விவகாரம் பாஜகவுக்கு தேர்தல் பரப்புரையில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏற்கெனவே 14 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில், நாளை எஞ்சியுள்ள 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. குறைந்தது 20 இடங்களை பெற பாஜக இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், அது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி மூத்த தலைவர் கவிதாவின் ஜாமின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை கடந்த மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த 2 வழக்கிலும் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள-தமயந்தி தொடரிலிருந்து, நடிகை பிரியங்கா நல்காரி கழற்றி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் பிரபலமான பிரியங்கா, தற்போது நள-தமயந்தி தொடரில் நடித்து வந்த சூழலில், அவருக்கு பதில் ஸ்ரீநிதி என்பவர் மாற்றப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தனக்கே தெரியாமல் இந்த நிகழ்வு நடந்துள்ளது. விரைவில் காரணம் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
மும்பையிலுள்ள சச்சின் டெண்டுல்கர் பங்களா அருகே வசிக்கும் டி சவுசா, சச்சினுக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சச்சின் பங்களா கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிமெண்ட் கலவை இயந்திரத்தில் இருந்து இரவு முழுவதும் வரும் சத்தத்தால் தூங்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள், அதிகாரிகளிடம் புகார் அளிக்கும்படி பதிவிட்டு வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் வெளியீடு, தள்ளிப் போவதாக தகவல் கசிந்துள்ளது. படத்தின் பின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. ஆனால், ஜூன் 13ஆம் தேதி தனுஷின் ‘ராயன்’ படம் வெளியாகும் என்று கூறப்படுவதால், இந்தியன் 2 படம் ஜூலை 18ஆம் தேதிக்குத் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.
*வெளியில் செல்லும்போது, புற ஊதாக் கதிர்கள் கூந்தலை சேதப்படுத்தாத வகையில், தலையை மறைக்கும் தொப்பி அணியலாம். *கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும். *கோடை காலத்தில் முடி உடைவது மற்றும் உதிருவதைத் தடுக்க, முன்கூட்டியே வெட்டி விடுவது பாதுகாப்பானது. *தலை முடிக்கு ஹீட்டர் பயன்படுத்துவதை குறைப்பது நல்லது. *கூந்தலைப் பாதுகாக்க தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
3ஆம் கட்ட தேர்தல் நாளை 94 தொகுதிகளில் நடைபெற்றாலும், அனைவரின் கவனமும் குஜராத்தை நோக்கியே உள்ளது. இதற்கு காரணம், குஜராத்தின் 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவது தான். 2014, 2019 போல இந்த முறையும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. மறுபுறம், காங்கிரஸின் பிரியங்கா, குஜராத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். MBBS, BDS படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. இந்நிலையில், ராஜஸ்தானில் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாகவும், ₹20 லட்சத்துக்கு வினாத்தாள் விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மும்பையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 20 வயது மாணவர் ஒருவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் சவுபின் சாஹிருக்கு ஜாமின் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் லாபத்தில் 40% தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றியதாக கேரளாவைச் சேர்ந்த சிராஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி சவுபின் சாஹிர், ஷான் ஆண்டனி மனு தாக்கல் செய்த நிலையில், வரும் 22ஆம் தேதி வரை அவர்களை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.