News May 6, 2024

கண்கலங்கிய நடிகை பாவனா

image

சித்திரம் பேசுதடி, வெயில் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ள பாவனா, வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பாவனா, தன்னை மோசமாக சித்தரித்து வதந்தி பரப்பப்பட்டதாக கண் கலங்கினார். கசப்பான சம்பங்களால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள சினிமாவை விட்டு விலகி இருந்ததாக அவர் கூறினார்.

News May 6, 2024

₹5,000 கோடி கடன் கேட்டு வங்கிகளுடன் அதானி பேச்சு

image

₹5,000 கோடி கடன் கேட்டு, வங்கிகளுடன் கவுதம் அதானி குழும நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதானி குழுமத்தின் டோடல் நிறுவன கிளையான தர்மா எல்என்ஜி டெர்மினல் லிமிடெட், 3 முதல் 5 ஆண்டு வரையிலான காலத்துக்கு கடன் கேட்டு, கிரெடிட் அக்ரகோல், டிபிஎஸ், பிஎன்பி பாரிபாஸ் உள்ளிட்டவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், இன்னும் 2 மாதங்களில் கடன் அளிக்கப்படலாம் என அத்தகவல் கூறுகிறது.

News May 6, 2024

தோனியால் கூட அதைக் கற்றுத் தர முடியாது

image

தோல்விகள் தான் மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்று மும்பை கேப்டன் பாண்டியா தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகள் குறித்து பேசிய அவர், தோல்விகளில் கிடைக்கும் அனுபவத்தை யாராலும் உங்களுக்கு கற்பிக்க முடியாது என்றும், தோனி போன்ற ரோல் மாடலாலும் கூட கற்றுத்தர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தோல்விகளால் தான் உங்களுடைய வேலை என்ன? என்பதை தெரிந்து கொள்ள முடியும் என கருத்துத் தெரிவித்தார்.

News May 6, 2024

23 லட்சம் மாணவர்களின் கனவு சிதைக்கப்பட்டுள்ளது

image

நீட் வினாத்தாள் கசிவால், 23 லட்சம் மாணவர்களின் எதிர்கால கனவு சிதைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ள மோடி அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், வினாத்தாள் வெளியான தகவலை தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது.

News May 6, 2024

தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை

image

மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கோடை காலத்தில் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

News May 6, 2024

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு

image

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு நடைபெறுவது எழுதப்படாத விதியாகி விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாகவும், விவசாயப் பணிகளும், குடிநீர் வழங்கலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

News May 6, 2024

கவிதா வழக்கில் ED, CBI-க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

image

நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா தொடுத்த வழக்கில் E.D., CBI.க்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பாக 7ஆம் தேதி நடக்கும் விசாரணையில் நேரில் ஆஜர்படுத்தக்கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், E.D., CBI பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News May 6, 2024

இணையத்தில் புயலைக் கிளப்பும் ஜெர்ஸி விவகாரம்

image

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் புதிய ஜெர்ஸி என்று வெளியான புகைப்படம் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. வழக்கமாக முழுவதும் நீல வண்ணத்துடன் ஜெர்ஸி இருந்து வரும் நிலையில், அந்த ஜெர்ஸி காவி மற்றும் நீல வண்ணத்துடன் காணப்படுகிறது. இதிலும் காவி நிறமா? என்று சிலர் கேள்வி எழுப்பிய நிலையில், புதிய ஜெர்ஸி சூப்பராக உள்ளதாக சிலர் பாராட்டி வருகிறார்கள். ஜெர்ஸி தொடர்பாக BCCI எந்த தகவலும் வெளியிடவில்லை.

News May 6, 2024

இடைத்தரகர் மீது நடிகை கௌதமி புகார்

image

நிலத்தை ஏமாற்றி விற்றதாக நடிகை கௌதமி போலீசில் புகார் அளித்துள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், முதுகுளத்தூர் பகுதியில் நிலம் வாங்கித் தருவதாக கூறி நடிகை கௌதமியிடம் ரூ.3 கோடி பெற்றுள்ளார். ஆனால், விற்க, வாங்க செபி தடையாணை பெற்ற நிலத்தை வெறும் ரூ.57 லட்சத்துக்கு வாங்கி தன்னிடம் ஏமாற்றி விற்றதாக, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

News May 6, 2024

’கோவிஷீல்டு’ வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

image

’கோவிஷீல்டு’ தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைவு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்தது. மருந்தை தயாரித்த சீரம் நிறுவனம், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதை உறுதி செய்தது. இந்நிலையில், இது தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!