News May 6, 2024

வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்துவோர் கவனத்திற்கு

image

பாதுகாப்பு, கண்காணிப்புக்காக வீடுகளில் சிசிடிவி பொருத்துவது அதிகரித்து விட்டது. அதுபோல பொருத்துகையில், கீழ்காணும் யோசனையை பின்பற்றலாம். * சுழலும் சிசிடிவி பொருத்தினால், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும் *வைஃபை சிசிடிவி எனில், தொலைவில் இருந்தாலும் பார்க்கலாம் *அபாய ஒலி எழுப்பும் வசதியிருந்தால், யாரேனும் மர்ம நபர் நடமாடினால் ஒலி எழுப்பும் *பேசும் வசதியிருந்தால், உரையாட முடியும்.

News May 6, 2024

கார் விற்பனையில் மாருதி தொடர்ந்து நம்பர் 1 இடம்

image

இந்தியாவில் கார் விற்பனையில் மாருதி சுஜூகி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதம் 1,37,952 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 0.46% அதிகம். ஆனால், மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14,766 குறைவு. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கார் விற்பனையில் மாருதி சுஜூகி 40.93% சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. 2ஆவது இடத்தில் ஹூண்டாய், 3ஆவது இடத்தில் டாடா உள்ளது.

News May 6, 2024

கோலியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம்

image

கோலியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளதாக பாக்., கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். கோலி சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை என்ற அவர், பாக்., வெற்றியை உறுதி செய்ய அவரை விரைவில் வீழ்த்த வேண்டும் என்றார். உலகக் கோப்பையில் பாக்., அணி இந்தியாவை ஜூன் 9இல் சந்திக்கிறது. பாக்., எதிராக 10 டி20 போட்டியில் ஆடியுள்ள கோலி, 488 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த டி20 உலகக் கோப்பையில் பாக்., எதிராக 82 ரன்கள் எடுத்தார்.

News May 6, 2024

9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News May 6, 2024

IPL: மும்பை அணி பவுலிங்

image

MI-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள மும்பை, எஞ்சி இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட, மும்பை அணி ஐபிஎல் தொடரில் வெளியேறிவிடும். ஹைதராபாத் அணியை வீழ்த்துமா மும்பை?

News May 6, 2024

நாய் கடித்து விட்டதா? உடனே இதை செய்துவிடுங்கள்

image

நாய் கடி, கீறல் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். அதுபோல் சிகிச்சை பெற செல்லும் முன்பு, நமக்கு நாமே செய்ய வேண்டிய முதலுவிகள் குறித்து சில பரிந்துரைகளை மருத்துவர்கள் அளித்துள்ளனர். அதில், நாய் கடித்த இடத்தை உடனடியாக சோப்பு, தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். காயம்பட்ட இடத்தில் தூசு படியாமல் இருக்க வெள்ளை துணியால் மூடி, கட்ட வேண்டும்.

News May 6, 2024

கெஜ்ரிவாலுக்கு எதிராக NIA விசாரணைக்கு பரிந்துரை

image

கெஜ்ரிவாலுக்கு எதிராக NIA விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடி முதல்வர் பணியை செய்து வருகிறார். இந்நிலையில், Sikhs for Justice என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து ஆம் ஆத்மிக்கு 16 மில்லியன் டாலர் நன்கொடை வாங்கியதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, NIA விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

News May 6, 2024

பிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா?

image

இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு, கார்கள் வசதி, விமானப் போக்குவரத்து, வெளிநாட்டு பயணங்கள் மற்றும் தங்குமிடம், உணவுவசதி உள்ளிட்ட சலுகைகள் உண்டு.

News May 6, 2024

ஐஏஎஸ் அதிகாரிகளை விட அதிக ஊதியம்

image

இந்தியாவில் மிக உயர்ந்த அரசுத்துறை பதவியான ஐஏஎஸ் பதவியிலுள்ள அதிகாரிகளுக்கு மாதம் ₹56,100 முதல் ₹1,31,249 வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்களை விட இஸ்ரோ, டிஆர்டிஓ விஞ்ஞானிகள், பொறியாளர்கள், இந்திய வனத்துறை அதிகாரிகள் (IFS), பல்கலைக்கழக பேராசிரியர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் அதிக ஊதியம் வாங்குகின்றனர். IFS அதிகாரிகள் ₹1,77,500 முதல் ₹2,25,000 வரை ஊதியம் பெறுகின்றனர்.

News May 6, 2024

ரேவண்ணா ஜாமின் மனு மீது நாளை விசாரணை

image

ரேவண்ணாவின் ஜாமின் மனுவை நாளை விசாரிப்பதாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெண்களுடன் ரேவண்ணா நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் காவலில் அவர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் ஜாமின் கோரி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!