News May 7, 2024

சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தா?

image

சடங்குகள் இல்லாத இந்து திருமணம் செல்லாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்தால் சுயமரியாதை திருமணங்களுக்கு சிக்கல் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்து திருமணங்களுக்கும், சுயமரியாதை திருமணங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறும் சட்ட வல்லுநர்கள், சுயமரியாதை திருமணங்களுக்கு சிக்கல் இருக்காது என தெளிவுப்படுத்தியுள்ளனர்.

News May 7, 2024

நடிகை கனகலதா காலமானார்

image

பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். மலையாளத்தில் ப்ரியம், அத்யதே கண்மணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களிலும், முன்னணி நடிகர்களுடனும் நடித்த அவர், தமிழில் பிரசாந்தின் உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர்.சி-யின் இருட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News May 7, 2024

கோடை காலத்தில் முட்டை உட்கொள்வது அவசியம்

image

கோடை காலங்களில் உணவில் அவசியம் முட்டையைச் சேர்க்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சூரிய ஒளியின் வெளிப்பாடு கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில், முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகிய ஆக்ஸிஜனேற்றிகள் கண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, கோடை காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்னையை முட்டை சரி செய்கிறது எனக் கூறுகின்றனர்.

News May 7, 2024

T20: புதிய ஜெர்சியில் இந்திய அணி

image

டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை, இந்திய அணி நேற்று அறிமுகம் செய்தது. இன்று, அணியின் கேப்டன் ரோஹித், கோலி உள்ளிட்ட சக வீரர்கள் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் இத்தொடர், வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News May 7, 2024

9 மணி நிலவரப்படி 10.57% வாக்குப்பதிவு

image

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 10.57% வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 10.12%, பிஹார் 10.03%, சத்தீஸ்கர் 13.24%, கோவா 12.35%, குஜராத் 9.87%, கர்நாடகா 9.45%, மத்திய பிரதேசம் 14.22%, மகாராஷ்டிரா 6.64%, உத்தரப் பிரதேசம் 11.63%, மேற்குவங்கம் 14.60% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News May 7, 2024

+2 தேர்வில் அதிக மார்க் எடுத்த 2 மாணவிகள்

image

சென்னை வில்லிவாக்கம் டான் பாஸ்கோ பள்ளி மாணவி பிரதிக்‌ஷா, +2 தேர்வில் 598 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். பொருளியல், வணிகம், கணக்குப்பதிவியல், வணிகம் கணிதம் ஆகிய 4 பாடங்களில் 100 மார்க் எடுத்துள்ளார். அதேபோல், திருப்பூரில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி மகாலெட்சுமி 598/600 மார்க் பெற்றுள்ளார். இதுவரை வெளியான மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தான் தமிழ்நாட்டின் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளனர்.

News May 7, 2024

SRH-க்கு பதிலடி கொடுத்த CSK, RCB, MI

image

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹைதராபாத் அணிக்கு, பெங்களூரு, சென்னை, மும்பை அணிகள் பதிலடி கொடுத்துள்ளன. அதிக முறை 200+ ரன்களுக்கு மேல் குவித்து மகத்தான வெற்றிகளை பதிவு செய்து வந்த SRH அணி, மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. MI, CSK, RCB அணிகளை அடுத்தடுத்து வீழ்த்திய ஹைதரபாத் அணி, அதே அணிகளிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் ஐபிஎல் களம் சூடுபிடித்துள்ளது.

News May 7, 2024

துணைத்தேர்வு அறிவிப்பு இன்று வெளியீடு

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சுமார் 7,60,606 பேர் இத்தேர்வை எழுதிய நிலையில், அவர்களில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11,594 பேர் தேர்வெழுதவில்லை. இந்நிலையில், தேர்வெழுததாத மற்றும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை அரசு தேர்வுத் துறை இன்று வெளியிடுகிறது.

News May 7, 2024

யானை என்ன தவறு செய்தது?

image

காட்டின் பேருயிரிகளான யானைகள் அதிக தூரம் நடக்கும் பழக்கம் கொண்டவை. ஆனால், அவற்றின் வழித்தடங்களில் குடியிருப்புகளை அமைக்கும் மனிதர்கள், அவற்றைத் தடுக்க மின்வேலிகளை அமைக்கின்றனர். சில நேரங்களில் யானைகள் இவற்றில் சிக்கி உயிரிழக்கின்றன. அதுபோல நேற்றும் கிருஷ்ணகிரி அருகே ‘மாக்னா’ யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. யானைகளின் வலசைப் பாதையை ஆக்கிரமித்தது மனிதனின் குற்றமா? யானைகளின் குற்றமா?

News May 7, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

image

கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.88.50க்கும், சவரன் ரூ.88,500க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!