India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்குநராக அறிமுகமாகும் ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரொமான்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘ரசவாதி’ படமும், கவினின் ‘ஸ்டார்’ படமும் அதே நாளில் திரைக்கு வருகின்றன. இதில், ‘ஸ்டார்’ படத்தின் ட்ரெய்லர் கவனம் ஈர்த்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த முறை அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இம்முறை தொகுதி மாறி ரேபரேலியில் போட்டியிடுவது காங்கிரசுக்கு பின்னடைவாகக் கருதப்பட்டது. ஆனால், இவ்விரு தொகுதிகளிலும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய பிரியங்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மூத்த தலைவர்களின் உதவியுடன் உள்ளூர் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், மாலை நேரக் கூட்டங்கள், டிஜிட்டல் பிரசாரங்கள் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்திய அணியின் புதிய ஜெர்சி விலை என்னவென்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர். டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை நேற்று பிசிசிஐ அறிமுகம் செய்தது. மூவர்ண கொடிகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஜெர்சியை, அடிடாஸ் கடைகள் மற்றும் இணையதளங்களில் ரூ.5,999-க்கு வாங்கலாம் என்று கூறப்படுகிறது. விலை சற்று அதிகம் என்பதால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (மே 8), நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 14 மாவட்டங்களிலும், மே 9ஆம் தேதி தென்காசி, நெல்லை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை செல்போன், லேப்டாப்பில் வைத்திருந்தால் உடனடியாக டெலிட் செய்யும்படி மக்களுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவற்றைப் பகிர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது. அவரது ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மதுபான முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது, கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் செய்வது அவசியமில்லை என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க பரிசீலிப்பதாகத் தெரிவித்தனர்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவன் சின்னதுரை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை முதல்வர் அன்பளிப்பாக வழங்கினார். இதேபோல், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற திருநங்கை நிவேதாவும் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். இவர்களின் உயர் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் பரிமளதாஸின் ஜாமின் மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், தமிழக அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டிய நீதிமன்றம், போதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றத்தை சமூகத்திற்கு எதிரான குற்றமாக பார்க்க வேண்டும். NIB-CID விசாரணை அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கியது.
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இத்திட்டம், மலைப் பாதைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தாலும், உள்ளூர் வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதக, பாதகங்கள் குறித்து ஆராயாமல் நீதிமன்றங்கள் இதுபோன்ற முடிவுகளை எடுப்பது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உங்களது கருத்தை சொல்லுங்க.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த இரட்டைச் சகோதரர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த நிர்மல், நிகில் என்ற இரட்டையர்கள், 600க்கு 478 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.