India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
64 நாடுகளில் தேர்தல் நடக்கும் 2024 மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக கருதப்படுகிறது. இந்தாண்டு ரஷ்யா, இந்தோனேசியா, தென் கொரியா, வங்கதேசம், தைவான், பாகிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளில் ஏற்கெனவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் தேர்தல் நடந்துவரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 400 கோடி மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத் திருவிழாவை உலகமே கொண்டாடட்டும்!
INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதி ஆக்குவோம் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். ஜார்க்கண்ட் பிரசாரத்தில் பேசிய அவர், பழங்குடியினரின் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க பிரதமர் மோடி விரும்புவதாக குற்றம்சாட்டினார். மேலும், தங்கள் ஆட்சியில் ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் ₹1 லட்சம் வழங்கி, அனைவரையும் லட்சாதிபதி ஆக்குவோம் எனக் கூறினார்.
3ஆவது கட்டத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 50% வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்களவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 3ஆவது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர். மதியம் 3 மணி நிலவரப்படி, தேர்தலில் 50.71% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொல்கத்தா அணியில் இருந்த விலகிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ், தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். தனது தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஐபிஎல் தொடரில் விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்காக நாடு திரும்பிய அவர், தற்போது மீண்டும் அணிக்கு திரும்புவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். இவர், நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.
ரஷ்ய அதிபராக 5ஆவது முறையாக புதின் பதவியேற்றார். எல்சினுக்கு பிறகு, 1999இல் அதிபரான அவர், தொடர்ந்து அப்பதவியை வகிக்கிறார். இடையில் 2008 முதல் 2012 வரை மெத்வதேவ் அதிபராக இருந்தார். அதன்பிறகு, புதின் மீண்டும் அதிபரானார். இன்று, 5ஆவது முறையாக பதவியேற்ற புதின், 2030 வரை அப்பதவியை வகிப்பார். இதன்மூலம் ஸ்டாலினுக்கு பிறகு, அதிபராக நீண்டகாலம் இருந்த தலைவர் எனும் பெருமையை பெறுவார்.
குமரிக்கடலுக்கு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், ஆதலால், இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டி20 WC இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகிய 2 பேரும் நிச்சயம் விளையாட வேண்டுமென முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். ஜூன் 1ஆம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டி, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது. இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாகவும், இதேபோல் நடுவரிசையில் சிவம் துபே அபாரமாக விளையாடுவதாகவும் கூறினார்.
அரை லிட்டர் பாலில் ஏலக்காயை போட்டு நன்றாக காய்ச்சி, ஆறவைக்க வேண்டும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து, தோலை நீக்கி அரைக்க வேண்டும். ஆறவைத்த பாலுடன் பாதாம், பிஸ்தா விழுது போட்டு, கலக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க வைத்து கீழே இறக்க வேண்டும். தேன், குங்குமப்பூ, சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, குளிர வைத்தால் சுவையான பாதாம் சர்பத் ரெடி.
ஜப்பான் நாட்டில் நேற்று 6G தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தியாவில் 5G தொழில்நுட்பம் மூலம் சாதாரணமாகவே 1 Gbps வேகம் வரை இண்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் 4G தொழில்நுட்பத்தை ஆகஸ்ட் மாதம் முதல் அறிமுகப்படுத்தப் போவதாக BSNL கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் அதிகபட்சமாக 45 Mbps இண்டர்நெட் வேகம் கிடைக்கும் என்று BSNL விளம்பரம் செய்து வருகிறது.
கோடைகாலத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடன், ஐஸ் வாட்டர் அருந்துவது ஆபத்து என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும். இதனால் பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்திய சுகாதாரத்துறை அவ்வாறு வெளியில் சென்று வந்தால் குளிர்பானம், ஐஸ் வாட்டரை உடனே பருகாமல், சற்று நேரம் கழித்து அருந்துவது நல்லது எனக் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.