News May 7, 2024

ஆதித்யநாத் அரசு அராஜகம் செய்கிறது

image

உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்களை வாக்களிக்கவிடாமல், ஆதித்யநாத் அரசின் போலீசார் அராஜகம் செய்வதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “தேர்தல் ஆணையமும், உ.பி., தலைமைத் தேர்தல் அதிகாரியும் இதை பார்த்தார்களா? இல்லையா? நடப்பவை அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கும் மக்கள், பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News May 7, 2024

‘புஷ்பா’ படம் எந்த விதத்திலும் உதவவில்லை

image

‘புஷ்பா’ திரைப்படம் தன்னை பான் இந்திய நடிகராக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்க்க எந்தவிதத்திலும் உதவவில்லை என்று பகத் ஃபாசில் வெளிப்படையாக கூறியுள்ளார். புஷ்பா – 1 படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு இயக்குநர் சுகுமார் மேல் வைத்திருந்த அன்பு மட்டுமே காரணம். அதனால் வேறு எந்த மேஜிக்கும் எனக்கு நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

News May 7, 2024

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக் கொலை

image

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், டிஆர்எப் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். குல்காமில் தேடுதல் வேட்டையின்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் டிஆர்எப் தலைவர் பாசித் தர்ரும் ஒருவராவார். 18 தீவிரவாத தாக்குதல் வழக்குகள் நிலுவையில் இருந்தநிலையில், அவர் தலைக்கு ₹10 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.

News May 7, 2024

இஸ்லாமியப் பெண்கள் மீது தடியடி

image

உத்தரப் பிரதேசத்தின் அவோன்லா தொகுதியில் இஸ்லாமியப் பெண்களை வாக்களிக்க விடாமல் போலீஸ் தடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செகுப்பூரில் 116ஆம் எண் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்ற இஸ்லாமியப் பெண்களை மட்டும் பாஜகவினரும், போலீசாரும் தனியே பிரித்து, வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர். அத்துடன், அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

News May 7, 2024

பீட்ரூட் ஜூஸில் இத்தனை நன்மைகளா?

image

மலிவான, அனைத்து பருவநிலைகளிலும் கிடைக்கும் காய்கறிகளில் பீட்ரூட்டும் ஒன்று. அதை ஜூஸ் செய்து அருந்தினால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அதை தெரிந்து கொள்வோம். *ரத்த சோகையை போக்கும் *ரத்தத்தை சுத்திகரிக்கும் *முடி உதிர்வு பிரச்னையை குறைக்கும் *சரும பிரச்னைகளைப் போக்கும் * பார்வை குறைபாட்டை போக்கும் * செரிமானக் கோளாறு, அல்சரை குணப்படுத்தும் *ஞாபக மறதிக்கு தீர்வு தரும்.

News May 7, 2024

OTT-இல் வெளியாகும் ‘கள்வன்’

image

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கள்வன்’ திரைப்படம், வரும் மே 10ஆம் தேதி சிம்ப்ளி சவுத் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. பி.வி.ஷங்கர் இயக்கிய இப்படத்தில், இவானா, தீனா, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. சிறு திருட்டு வேலைகள் செய்யும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில், காதலும் அரவணைப்பும் கிடைத்தால் ஏற்படும் மாற்றமே படத்தின் கதை.

News May 7, 2024

இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்

image

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி போன்ற பல்வேறு பக்திப் படங்களை இயக்கிய ஓம்சக்தி ஜெகதீசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். MGR நடித்த ‘இதயக்கனி’, சிவாஜி நடித்த ‘சிரஞ்சீவி’ உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சரத்பாபு, சுமலதா நடித்த ‘திசை மாறிய பறவைகள்’ படத்தை இயக்கியதற்காக தமிழக அரசின் விருதும் பெற்றார். ஜெகதீசனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News May 7, 2024

IPL: அஹமதாபாத் சென்றார் தல தோனி

image

CSK-GT அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மே 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று விமானம் மூலம் அஹமதாபாத் சென்றடைந்தனர். விமான நிலையத்தில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்போட்டியைத் தொடர்ந்து, RR அணியை சேப்பாக்கத்திலும், RCB அணியை சின்னசாமி மைதானத்திலும் சென்னை அணி எதிர்கொள்ள உள்ளது.

News May 7, 2024

ஊரும், சோறும்

image

தமிழகத்தில் உள்ள சில பாரம்பரிய உணவுகள், அந்த மாவட்டங்களில் சாப்பிட்டால் மட்டுமே உண்மையான சுவை தெரியும். அவை: ஆம்பூர் ‘பிரியாணி’, திருவண்ணாமலை ‘திணைச் சோறு’, காரைக்குடி ‘உப்புக்கண்டம்’, சிதம்பரம் ‘இறால் வறுவல்’, கொங்கு ‘சந்தகை’, ராமேஸ்வரம் ‘மாசிக் கருவாட்டு தொக்கு’, வேலூர் ‘வாத்துக்கறி’, விருதுநகர் பரோட்டா, திண்டுக்கல் பிரியாணி’ போன்ற உணவுகளை அந்தந்த ஊர்களில் ஒருமுறையாவது சுவைத்துப் பாருங்கள்.

News May 7, 2024

ஆவேஷம் ₹150 கோடி வசூல்

image

பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம், உலகம் முழுவதும் ₹150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, பகத் ஃபாசிலின் அதிகம் வசூலித்த படமாகும். ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், வெற்றிப் படங்களான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் வரிசையில் ஆவேஷமும் இணைந்துள்ளது.

error: Content is protected !!