India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘வெண்ணிலா கபடி குழு’ அப்புக்குட்டி நடித்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். கிராமப் பின்னணியில், காதலை நகைச்சுவை கலந்து எழுதி, இயக்கியுள்ளார் ராஜு சந்திரா. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், ஸ்ரீஜா ரவி, ரோஜி மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவையில், பாஜக அரசுக்கு 48 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. அதில் 41 பேர், பாஜகவினர். 6 பேர் சுயேச்சைகள். மேலும் ஒருவர், HL கட்சியைச் சேர்ந்தவர். JJB கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களும் ஆதரிப்பதாக சொல்லப்படுகிறது. 3 சுயேச்சைகள் வாபஸ் பெற்றதால், பலம் 45ஆக குறைந்த போதிலும், JJB எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால் ஆட்சிக்கு ஆபத்தில்லை எனக் கூறப்படுகிறது.
பணிச்சூழல் காரணமாக திரைப்பட நட்சத்திரங்கள் போன்றோர், ஜிம்மில் இரவில் உடற்பயிற்சி செய்யும் நிலை உள்ளது. அப்படி செய்தால் தூக்கம் பாதிக்குமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஆனால், பிரபல மருத்துவ இணையதள கட்டுரையில், இரவில் உடற்பயிற்சி செய்தால், உடல் சோர்வடைந்து நல்ல ஆழ்ந்த தூக்கம் வருமென்று கூறப்பட்டுள்ளது. தூங்கச் செல்ல 90 நிமிடத்துக்கு முன்பு, உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ₹50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே EPF கணக்கை 20 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால், லாயல்டி திட்டத்தின் கீழ் ₹50,000 வரை அளிக்கப்படவுள்ளது. ₹5,000 ஊதியம் எனில் ₹30,000, ₹10,000 ஊதியம் எனில் ₹40,000, ₹10,000க்கு மேல் ஊதியம் எனில் ₹50,000 இலவசமாக அளிக்கப்படவுள்ளது.
ஹரியானா முதல்வராக நயாப் சைனி பதவி ஏற்று 100 நாள்களைக் கூட நிறைவு செய்யாத நிலையில், அவரது அரசு ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. 2019 இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜக (41), ஜேஜேபியுடன் (10) இணைந்து ஆட்சி அமைத்தது. இக்கூட்டணி கடந்த மார்ச் 12ஆம் தேதி முறிந்தது. இதனையடுத்து, 3 சுயேச்சை எல்.எல்.ஏக்கள் ஆதரவைப் பெற்ற, பாஜக போராடி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி, வெளிநாடு, உள்நாட்டு பயணம் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஓய்வுக்கு பின், மாதம் ₹1.5 லட்சம் அளிக்கப்படும்.
நீட் தேர்வை அமெரிக்க நிறுவனம் நடத்துவது ஏன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். உயிர் தமிழுக்கு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், நீட் தேர்வு வினாத்தாள் கசிவதை சுட்டிக்காட்டி, அதன்மூலம் போலி மருத்துவர்களே உருவாவதாக குற்றம்சாட்டினார். நீட் தேர்வை நடத்த அமெரிக்க நிறுவனம் ஏன்? இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் இல்லையா? என்றும் சீமான் கேள்வியெழுப்பினார்.
அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரசும், I.N.D.I.A. கூட்டணியும் தம்மை அர்ப்பணித்து கொண்டிருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அரசியல் ஆதாயத்துக்கு பாஜகவும், மோடியும் வெறுப்புணர்வை ஊக்குவிப்பதாகவும், ஆனால் காங்கிரசும், தாமும் சமூகத்தில் அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும் போராடுவதாகவும் தெரிவித்தார்.
ராஜமவுலி இயக்கத்தில் 2022இல் திரையரங்குகளில் வெளியான ஆர்ஆர்ஆர் படம், ரூ.1,100 கோடி வசூலித்தது. அந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக ஆஸ்கர் விருதும் வென்றது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் இடையே வரவேற்பு கிடைத்து வருவதால், இப்படமும் வரும் 10ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
DC-RR இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற RR அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் இருக்கும் டெல்லி அணி, எஞ்சி இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை டெல்லி அணி வீழ்த்துமா?
Sorry, no posts matched your criteria.