India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்டன்ட் மாஸ்டர்கள், இயக்குநர்கள் என்பதை எல்லாம் தாண்டி அன்பறிவு சகோதரர்கள் தன்னுடைய அண்ணன்களைப் போன்றவர்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “முதல் முதலாக என்னை நம்பி ஒரு புரொடியூசரிடம் பேசி, எனக்காக வாய்ப்புக் கேட்டவர்கள். என்மீது எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தபோது, நான் பெரிய ஆளாக வருவேன் என்று அன்பறிவு இருவர்தான் ஊக்குவித்தார்கள்” என்றார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்லும் முயற்சியை முறியடித்து விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவ கர்னல்கள் 2 பேர் மூலம் ரஷ்யாவின் எப்எஸ்பி உளவு அமைப்பு, ஜெலன்ஸ்கியை கொலை செய்ய முயன்றதாகவும், அதை உக்ரைன் உளவுத்துறை கண்டுபிடித்து முறியடித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 அதிகாரிகளையும் பிடித்து உளவுத்துறை விசாரித்து வருவதாகவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது.
IPL 2024 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ஜேக் ஃபிரேசர், 20 பந்து அல்லது அதை விட குறைவான பந்தில் 3 முறை அரை சதம் விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். சன் ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக 15 பந்துகளில் 2 அரை சதங்களை அவர் விளாசியுள்ளார். இதையடுத்து, இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரமாண்ட சிக்சரை விளாசி, 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
மக்களவைக்கு 3ஆம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் 61.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. 3ஆவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் (இரவு 8 மணி நிலவரம்), அதிகபட்சமாக அசாமில் 75.26% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்து, கோவாவில் 74.27% வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 73.93% வாக்குகளும், கர்நாடகத்தில் 67.76% வாக்குகளும், சத்தீஸ்கரில் 66.99% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்தியாவிலேயே முதல் ஹைபிரிட் கிரிக்கெட் மைதானம், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையான புல்வெளி கொண்டது சாதாரண மைதானமாகவும், இயற்கை, சிந்தடிக் பைபர் புல்வெளி கொண்டது ஹைபிரிட் மைதானமாகவும் கருதப்படுகிறது. அதன்படி, தரம்சாலாவில் முதல் ஹைபிரிட் மைதானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மைதானம் 5% சிந்தடிக் பைபர் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உயிரிழந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 2ஆம் தேதி மாயமான அவர், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவரது முகம், கழுத்து, கை, கால்கள் அனைத்தும் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களை சேகரித்துள்ள போலீசார், அவரது மரணத்திற்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
INDIA கூட்டணி வென்றால், பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட GST சட்டம் திருத்தப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ராஞ்சி பிரசாரத்தில் பேசிய அவர், “பாஜக அரசு ஐந்து வரி அடுக்குகளுடன் தவறான GST திட்டங்களை செயல்படுத்தியது. அதை குறைந்தபட்சமாக ஒரு வரி அடுக்காகத் திருத்தி அமல்படுத்துவோம். ஏழைகள், சிறு நிறுவனங்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்போம்” எனக் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குல்காம் ரெட்வானி பெயன் பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பதிலடி கொடுத்த பாதுகாப்புப்படையினர் 4 தீவிரவாதிகளை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
SETC பேருந்துகளில் UPI மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம், பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை எளிதில் பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெபிட், கிரெடிட் கார்டுகள், Gpay, Phonepe போன்ற UPI பரிவர்த்தனை மூலம் இனி SETC பேருந்துகளில் டிக்கெட் பெறலாம்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராக ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், “ரோஹித் சோர்வுற்று இருப்பதாக நினைக்கிறேன். சிறிது ஓய்வு அவருக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். ஆனால், MI அணியின் முக்கிய வீரராக இருப்பதால், அவருக்கு ஓய்வு கிடைக்குமா எனத் தெரியவில்லை” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.