India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர், சிகிச்சையின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உரிய மருத்துவ வசதிகள் செய்த பின் மருத்துவமனையை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏனைய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அப்போது, மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் தோனி காயத்துடன் விளையாடி வருவதாக ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர். அதேநேரம், காயத்துடன் விளையாட வேண்டிய தேவை என்ன என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவினாஷ் ராவ் என்ற இளம் விக்கெட் கீப்பர் அணியில் இருக்கும்போது தோனி ஓய்வெடுக்காமல் விளையாடுவது ஏன் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
பதவியில் இருந்து வெளியேறும் நேரம் வந்துவிட்டதை, மோடி உணர்ந்துள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிஹாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சர்வாதிகார அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். இதனால் அச்சத்தில் பதற்றம் அடைந்துள்ள மோடி, தொடர்ந்து பொய் பிரசாரம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்துக்கு (கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் நீலகிரிக்கு படையெடுத்து வருவதால், இந்தாண்டு மலர் கண்காட்சி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபகத் ஃபாசில் நடித்த ‘ஆவேஷம்’ திரைப்படம் நாளை அமேசான் பிரைம் OTT-இல் வெளியாகவுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்தது. கண்களாலேயே வில்லத்தனத்தை காட்டும் பகத், இப்படத்தில் தனது ஜாலி கலந்த வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஏப்.30ம் தேதி வரை 24,74,985 ஆண்கள், 28,98,847 பெண்கள், 284 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 53.74 லட்சம் பேர், அரசு வேலைக்காகப் பதிவுச் செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்குள் 10,69,609 பேர், 19 – 30 வயதுக்குள் 23,62,129 பேர், 31 -45 வயதுக்குள் 16,94,518 பேர், 46 – 60 வயதுக்குள் 2,40,537 பேர், 60 வயதிற்கும் மேற்பட்டோர் 7,323 பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக, பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடுத்துள்ளார். அதில் மதக் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கும் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு அவர் கோரியுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு அளித்திருந்தது.
அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் மென்மேலும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை தினம் மே 10ஆம் தேதி வருகிறது. அன்று காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 மணி வரை தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அன்றைய தினம் தங்கம் மட்டுமல்லாமல் அனைத்து விதமான சொத்துகளையும் வாங்கலாம் என்று கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.