News May 9, 2024

ரேவண்ணாவின் போலீஸ் காவல் நீட்டிப்பு

image

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் இவரது போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். அப்போது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் ஒரு வாரம் காவலை நீட்டிக்க போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று மே 14 வரை அவரது போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

முதல் அணியாக வெளியேறியது மும்பை

image

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால், 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மட்டுமே பெற்றுள்ள மும்பை முதல் அணியாக வெளியேறியுள்ளது. இனி நடைபெறும் 2 போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்றாலும் MI ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பில்லை. மும்பை அணி வெளியேறியதால் MI ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

News May 9, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

* CMC மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.
* அயலக அணி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா.
* +2 முடித்த மாணவர்கள் மேற்படிப்பு குறித்த சந்தேகங்களுக்காக 14417 என்ற இலவச எண்ணை தொடர்புகொள்ளலாம்.
* 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்படும்.

News May 9, 2024

இதுவரை 56 ஆயிரம் பேர் விண்ணப்பம்

image

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 56,515 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மதம் (ஜூன்) 6ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் <>www.tneaonline.org<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

News May 9, 2024

வாழ்வா? சாவா? போட்டியில் #RCBvsPBKS

image

ஐபிஎல்லில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி பெற்றுள்ள நிலையில், RCB 7ஆவது இடத்திலும், PBKS 8ஆவது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி ப்ளே ஆஃப்க்கு தகுதி பெரும் வாய்ப்பை இழக்கும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும். இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News May 9, 2024

தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது

image

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (மே 10) காலை 9:30 மணிக்கு வெளியாகின்றன. மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்ற இந்தத் தேர்வை சுமார் 9.08 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில், நாளை தேர்வு எழுதிய மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவெண், பிறந்த தேதியை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம்.

News May 9, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶மே – 9, சித்திரை – 26 ▶கிழமை – வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:30 AM – 7:30 AM ▶குளிகை நேரம்: 9:00 AM – 10:30 AM ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶திதி: துவிதியை

News May 9, 2024

காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்

image

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீர் ஒரு டம்ளர் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து, கழிவுகள் வெளியேறும். பின்னர், இரவு நீரில் ஊறவைத்த பாதாம் மற்றும், ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும் ஆப்பிள், தர்பூசணி, பப்பாளி போன்ற அமிலத்தன்மை குறைவான பழங்களை சாப்பிடலாம். கேரட், வெள்ளரி, முள்ளங்கி போன்ற கைகளை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் கிடைக்கும்.

News May 9, 2024

நாளை ரீ-ரிலீஸ் ஆகும் ‘RRR’

image

சமீப காலமாக ரீ-ரிலீஸ் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. புதிய படங்களை விட ரீ-ரிலீசாகும் படங்கள் அதிக வசூலையும் ஈட்டி வருகின்றன. அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘RRR’ படம் நாளை (மே 10) ரீ-ரிலீஸ் ஆகிறது. S.S.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் நடிப்பில் வெளியான இப்படம் 1,000 கோடிக்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

வள்ளலார் பொன்மொழிகள்

image

* உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
* பிறருடைய பசியைப் போக்குவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்து விடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.
* உடலை வருத்தி விரதம் இருப்பதை விட.. யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.

error: Content is protected !!