News May 9, 2024

அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

image

திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சி சாதனையல்ல, வேதனை என இபிஎஸ் விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டுக்கு இபிஎஸ் பொற்கால ஆட்சியைக் கொடுத்தது போல, திமுக ஆட்சியை விமர்சிப்பதாகத் தெரிவித்தார். மத்திய அரசிடம் மாநில உரிமைகளை ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்த அதிமுகவுக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பதிலடி கொடுத்தார்.

News May 9, 2024

நாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்புப் பேருந்து

image

வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

News May 9, 2024

10 மாத குழந்தையை நாய் கடித்தது

image

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் வசித்து வரும் கிரிஷ் தனது 10 மாத ஆண் குழந்தையுடன் குடியிருப்பு பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் நடைபயிற்சி சென்ற போது அவரது நாய், குழந்தையின் கை விரலைக் கடித்தது. குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து சென்ற கிரிஷ், வேலாயுதம் மீது புகார் அளித்தார். குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவம் தொடர்வதால், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

News May 9, 2024

எந்த பக்கம் திரும்பினாலும் சிக்சர்

image

நேற்று LSG வெற்றி இலக்காக நிர்ணயித்த 166 ரன்களை நோக்கி களமிறங்கிய SRH முதல் ஓவரில் (7 ரன்கள்) வழக்கமான ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தியது. அதன்பின் கண்ணை மூடி திறப்பதற்குள் ஹெட் 8 SIX, 8 FOUR, அபிஷேக் 6 SIX, 8 FOUR என பறக்கவிட 9.4 ஓவரில் அந்த அணி வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தால், இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன் அடித்தவர்களின் பட்டியலில் ஹெட் 533 ரன்களுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

News May 9, 2024

திமுகவை கண்டிப்பது போல காங்கிரஸ் நாடகம்

image

வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் காமராஜர் ஞாபகம் வந்ததா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். காமராஜர் நினைவிடத்தை இடுகாடு போல வைத்திருப்பதா என கேள்வி எழுப்பி செல்வப்பெருந்தகை கண்டித்திருந்தார். இதைக் குறிப்பிட்டு பேசிய தமிழிசை, திமுக ஆட்சியை கண்டிப்பது போல காங்கிரஸ் நாடகமாடுவது மக்களை ஏமாற்றும் செயல் எனக் கூறினார்.

News May 9, 2024

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி

image

அம்பானி, அதானி குறித்து வசை பாடி வந்த ராகுல் காந்தி, தேர்தல் நேரத்தில் நிறுத்தி விட்டதாகக் குற்றம்சாட்டிய பிரதமர், அவர்களிடம் இருந்து காங்கிரஸ் கட்டுக்கட்டாக பணம் பெற்றதா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை விசாரிக்க அவர்களின் வீடுகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளை அனுப்பி வைக்குமாறு ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார்.

News May 9, 2024

சபரிமலையில் 14ஆம் தேதி நடைதிறப்பு

image

வைகாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் மே 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதன்பின் மே 15 – மே 19 வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் மே 19ஆம் தேதி அரிவராசனம் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வழக்கம் போல ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

ஆயுள் பலம் தரும் ‘பன்னிபாக்கம் மகாதேவர்’

image

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம். ‘சிவாலய ஓட்டம்’ தலங்களில் 6வது ஊர் இதுவாகும். அற்புதமான இத்தலத்தில் அருளும் ஈஸ்வரருக்கு கிராத மூர்த்தி, பசுபதி ஆகிய பெயர்களும் உண்டு. இங்கு மிருத்யுஞ்ஜய அர்ச்சனை செய்தால் ஆரோக்கியம் மேம்படும்; பாக்யசூக்த அர்ச்சனை செய்து வழிபட்டால், வேலை கிடைக்கும், தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

News May 9, 2024

ரேவண்ணாவின் போலீஸ் காவல் நீட்டிப்பு

image

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் இவரது போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். அப்போது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் ஒரு வாரம் காவலை நீட்டிக்க போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று மே 14 வரை அவரது போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

முதல் அணியாக வெளியேறியது மும்பை

image

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால், 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மட்டுமே பெற்றுள்ள மும்பை முதல் அணியாக வெளியேறியுள்ளது. இனி நடைபெறும் 2 போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்றாலும் MI ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பில்லை. மும்பை அணி வெளியேறியதால் MI ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

error: Content is protected !!