News May 9, 2024

மோடியின் செயல் அநாகரீகமானது

image

ராமரை பற்றி அதிகம் பேசாத மோடி, தேர்தல் நேரத்தில் ராமரை கையில் எடுத்துள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரில் பிரசாரம் செய்த அவர், வெற்றி பெற மோடி மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகக் கூறினார். ஓட்டுக்காக அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சிக்கும் பிரதமரின் செயல் அநாகரீகமானது என்றும் அவர் தெரிவித்தார்.

News May 9, 2024

மோடி மீண்டும் பொய் பிரசாரம் செய்கிறார்

image

ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், காங்கிரஸ் ‘பாபரின் பெயரால்’ ராமர் கோயிலுக்கு பூட்டு போட்டுவிடும் என மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, மோடி மீண்டும் மீண்டும் அப்பட்டமான பொய் பிரசாரம் செய்வதாகத் தெரிவித்தார்.

News May 9, 2024

வாட்ஸ்ஆப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

image

அனைத்து வயதினரும் எளிமையான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி வரும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. போட்டியாக எத்தனை செயலிகள் வந்தாலும், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் புதிதாக பல ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்தவகையில், வாட்ஸ் ஆப்பும் புதிதாக ‘GameOn’ என்ற பெயரில் ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது. இதனை வாட்ஸ்ஆப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

News May 9, 2024

‘ராயன்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

image

தனுஷ் இயக்கி, நடிக்கும் அவரது 50ஆவது படமான ‘ராயன்’ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “அடங்காத அசுரன்…” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, அதற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

News May 9, 2024

அண்ணனுடன் மீண்டும் இணைந்த முதல்வர் ஸ்டாலின்

image

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை 2வது முறையாக நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இச்சந்திப்பின் போது, தந்தை இறப்பின் போது கூட பேசாமல் இருந்த அண்ணனும் தம்பியும் நீண்ட நேரம் பேசியதாகத் தெரிகிறது. 2014இல் திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டது முதல் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.

News May 9, 2024

சுற்றுலா விரும்பிகளுக்கான சிறந்த தீவுகள்

image

கோடை விடுமுறையைக் கழிக்க பலரும் தீவுப் பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்ல விரும்புகின்றனர். அவர்களுக்காகவே, இந்த ஆண்டுக்கான சிறந்த தீவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் தீவு முதலிடம் பிடித்துள்ளது. தான்சானியாவில் உள்ள சான்சிபார், கிரீஸில் உள்ள கிரீட், கரீபியனில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ, ஸ்பெயினில் உள்ள மஜோர்கா ஆகிய தீவுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News May 9, 2024

சர்ச்சையில் சிக்கிய LSG உரிமையாளர்

image

SRH-க்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால், LSG அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ராகுலை கடிந்து கொள்ளும் வீடியோ பேசுபொருளாகியுள்ளது. தோல்விக்கு கேப்டன் என்ற முறையில் ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும், தனியறையில் நடக்க வேண்டிய இதுபோன்ற நிகழ்வு பொதுவெளியில் நடந்ததை ஏற்கமுடியாது. அவரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என கோயங்காவுக்கு எதிராக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

News May 9, 2024

விஜய் பிறந்தநாளில் முதல் மாநாடு?

image

தவெக தலைவர் விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகவுள்ள விஜய், முதல் மாநாட்டைத் தனது பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 9, 2024

ரீரிலீஸுக்கு தயாராகும் விஜய்யின் அடுத்தப் படம்

image

ரீரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ‘கில்லி’ திரைப்படம் திரையரங்க உரிமையாளர்களே எதிர்பார்க்காத அளவில், வசூலை அள்ளிக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு படங்களை ரீரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. அந்த வகையில், விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான ‘சச்சின்’ படத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவரும் பணிகள் நடந்து வருகின்றன.

News May 9, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

நாளை அட்சய திருதியை முன்னிட்டு, நகை வாங்க மக்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹120 குறைந்து ₹52,920க்கும், கிராமுக்கு ₹15 குறைந்து ₹6,615க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு அதிகரித்து ₹88.70க்கு விற்பனையாகிறது. அட்சய திருதியையொட்டி நாளையும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!