India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நலன்குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கார்த்தி 26’ படத்திற்கு ‘வா வாத்தியாரே’ என்ற பெயரேயை தயாரிப்பு நிறுவனம் இறுதி செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆக்ஷன் மசாலாவாக உருவாகும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இதில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வேடத்தில் கார்த்தி நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு ஜூன் 3ஆம் தேதி தொடங்குகிறது. 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 70,326 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி நாளாகும். இந்நிலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மே 28 – 30, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 15 – 20 வரையிலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஷின் பிளாஸ்டிக் கவர் அவரது வீட்டின் மாட்டுக்கொட்டகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாகவும், பல்வேறு சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசாரின் விசாரணையில் பல்வேறு கேள்விகளுக்கு அவரது மகன்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதிக ரசிகர்கள் வட்டாரத்தைக் கொண்டுள்ள சிவகார்த்திகேயனை கேமியோ ரோலில் நடிக்க வைக்க திரைத்துறை ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக விஜய்யின் ‘G.O.A.T’, ரஜினியின் ‘கூலி’, கவினின் ‘ஸ்டார்’ ஆகிய படங்களில் அவர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த தகவல்கள் எதுவும் உறுதியாகாத நிலையில், கவின் நெருங்கிய நண்பர் என்பதால், ‘ஸ்டார்’ படத்தில் அவர் நடித்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மிக்சியில் ஒரு மாம்பழத்தைத் துண்டுகளாக்கிச் சேர்க்கவும். அதனுடன் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து, 3 ஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் தேன், 4 ஸ்பூன் தயிர் சேர்த்துக் கலக்கவும். ஏலக்காயைத் தூளாக்கிப் போடவும். அனைத்தையும் சேர்த்தப் பிறகு அரைக்கவும். பிறகு டம்பளரில் ஊற்றி, ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து, பாதாம், முந்திரியைப் பொடியாக்கித் தூவினால், குழந்தைகள் விரும்பும் மாம்பழ ஸ்மூத்தி ரெடி.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சி சாதனையல்ல, வேதனை என இபிஎஸ் விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டுக்கு இபிஎஸ் பொற்கால ஆட்சியைக் கொடுத்தது போல, திமுக ஆட்சியை விமர்சிப்பதாகத் தெரிவித்தார். மத்திய அரசிடம் மாநில உரிமைகளை ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்த அதிமுகவுக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பதிலடி கொடுத்தார்.
வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் வசித்து வரும் கிரிஷ் தனது 10 மாத ஆண் குழந்தையுடன் குடியிருப்பு பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் நடைபயிற்சி சென்ற போது அவரது நாய், குழந்தையின் கை விரலைக் கடித்தது. குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து சென்ற கிரிஷ், வேலாயுதம் மீது புகார் அளித்தார். குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவம் தொடர்வதால், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று LSG வெற்றி இலக்காக நிர்ணயித்த 166 ரன்களை நோக்கி களமிறங்கிய SRH முதல் ஓவரில் (7 ரன்கள்) வழக்கமான ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தியது. அதன்பின் கண்ணை மூடி திறப்பதற்குள் ஹெட் 8 SIX, 8 FOUR, அபிஷேக் 6 SIX, 8 FOUR என பறக்கவிட 9.4 ஓவரில் அந்த அணி வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தால், இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன் அடித்தவர்களின் பட்டியலில் ஹெட் 533 ரன்களுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.
Sorry, no posts matched your criteria.