News November 8, 2025

தாத்தாவானார் அன்புமணி

image

அரசியலில் இளைஞர் போல் ஆக்டிவ்வாக இருக்கும் பாமக தலைவர் அன்புமணி தாத்தாவும், செளமியா பாட்டியாகவும் அந்தஸ்து பெற்றுள்ளனர். ஆம்! அன்புமணியின் 2-வது மகள் சங்கமித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சினிமா தயாரிப்பாளரான சங்கமித்ரா, கடந்த 2024 தேர்தலின்போது, செளமியாவுக்கு ஆதரவாக வீடுவீடாக பரப்புரை செய்து கவனத்தை ஈர்த்தவர். பாமகவின் அடுத்த அரசியல் வாரிசு இவர்தான் என பேச்சு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2025

லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS

image

HDFC வங்கி தனது MCLR வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் குறைத்துள்ளது. இதற்கு முன் 8.45% முதல் 8.65 சதவீதமாக இருந்த MCLR, தற்போது அது 8.35% – 8.60% ஆக குறைந்துள்ளது. இதன்விளைவாக 1 மாதம், 3 மாதம், 6 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகளுக்குள் நீங்கள் செலுத்தவேண்டிய பர்சனல், பிசினஸ் மற்றும் ஹோம் லோன்கள் மீதான வட்டி / EMI சிறிது குறையும். முன்னதாக SBI வங்கியும் தனது MCLR வட்டி விகிதத்தை குறைத்தது. SHARE.

News November 8, 2025

அமெரிக்காவே வேணாம் என கதறும் சிட்டிசன்கள்!

image

USA-ல் 18-34 வயதுடைய 65% பேர் நாட்டை விட்டு வெளியேற விருப்பப்படுவதாக American Psychological Association-ன் சர்வேயில் தெரியவந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகவும், 39% பேர் அரசியல் சூழல் காரணமாக வெளியேற நினைப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பணவீக்கம், மருத்துவ செலவுகள், விலைவாசி, வேலையின்மை, தனிமை ஆகியவையே காரணம் என கூறப்பட்டுள்ளது.

News November 8, 2025

உலகில் பேய்கள் அதிகம் உள்ளதாக நம்பப்படும் இடங்கள்

image

உலகத்தில் பேய்கள் அதிகம் நடமாடும் 6 திகிலான இடங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கெல்லாம், யாரோ அழுவது போன்ற சத்தம், சலங்கை சத்தம், ஜன்னல்கள் அடித்துக்கொள்வது போன்ற சத்தம், வெள்ளை உருவம் போன்ற விஷயங்கள் நடப்பதாக கூறுகின்றனர். இதனால் இந்த பக்கமே மக்கள் தலைவைத்து படுக்க அச்சப்படுகின்றனராம். அந்த இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. நீங்க பேயை பார்த்திருக்கீங்களா?

News November 8, 2025

இந்த Android போன்கள் HACK ஆகும்..BIG ALERT!

image

Android version 13, 14, 15, 16 போன்களை வெச்சிருக்கீங்களா? உங்கள் மொபைலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால், அவை எளிதில் HACK ஆகலாம் என CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. சாம்சங், ஒன்பிளஸ், ஷாவ்மி, ரியல்மி, மோட்டோரோலா, விவோ, ஓப்போ, கூகுள் பிக்சல் என அனைத்து போன்களும் இந்த ரிஸ்க்கில் உள்ளன. எனவே உங்கள் போன் HACK ஆகாமல் இருக்க உடனடியாக Security Update செய்யுங்கள். முக்கியமான செய்தி, SHARE IT.

News November 8, 2025

பிரபல தமிழ் நடிகைக்கு 2வது கல்யாணம்

image

CSK அணியின் முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை 2-வது திருமணம் செய்ய உள்ளதாக நடிகை சம்யுக்தா உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனிருதா ஸ்ரீகாந்த், முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் ஆவார். அனிருதா ஸ்ரீகாந்த் – சம்யுக்தா இருவரும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2025

EPS முகத்திரை கிழிந்தது: ஆர்.எஸ்.பாரதி

image

பெண்கள் பாதுகாப்பு குறித்து EPS-ன் அற்பத்தனமான அரசியல் அம்பலமானது என்று ஆர்.எஸ்.பாரதி கட்டமாக விமர்சித்துள்ளார். கோவை விவகாரத்தில் தன்னை யாரும் கடத்தவில்லை என சம்பந்தப்பட்ட பெண்ணே வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால், எந்த வகையிலாவது திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் நாள்தோறும் விஷமப் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் EPS-ன் முகத்திரை கிழிந்துள்ளது எனவும் சாடியுள்ளார்.

News November 8, 2025

FLASH: 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக TN-ல் நவ. 8-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என ஏற்கெனவே IMD அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், வெளியே செல்வோர் மறக்காமல் குடையோடு செல்லுங்கள்.

News November 8, 2025

ஒரே கட்சியாக மாறுகிறது.. அரசியல் திருப்பம்

image

வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய திருப்பமாக பிராந்திய அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைய உள்ளன. அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகிய 7 மாநிலங்களின் உரிமைக்காக முக்கிய தலைவர்களான கான்ராட் சங்கா, பிரத்யோத் மாணிக்யா, டேனியல் லாங்தசா, கிகோன் உள்ளிட்டோர் டெல்லியில் இதற்காக ஆலோசனை நடத்தினர். தென்னிந்தியாவிலும் இதுபோன்ற பேச்சு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

News November 8, 2025

இனி பட்டன்போனில் பணம் அனுப்பலாம்!

image

UPI-ல் பணம் அனுப்ப ஸ்மார்ட்போன் தான் வேண்டும் என்பதில்லை. பட்டன்போனில் கூட UPI மூலம் பணம் அனுப்பலாம். இதற்காக 2022-ல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய சேவை தான் ‘UPI 123 Pay’. இதில், மிஸ்டு கால் கொடுத்தால் வரும் அழைப்பில் பரிவர்த்தனை மதிப்பு, UPI pin-ஐ வழங்கினால் போதும். இந்த சேவையை சில வங்கிகள் செயல்படுத்தி வரும் நிலையில், IOB-யும் விரைவில் இந்த சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

error: Content is protected !!