News August 19, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தை 2ஆக பிரிக்கும் திமுக

image

உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் MLA காதர்பாட்சா <<17449428>>முத்துராமலிங்கம் <<>>மீது ஸ்டாலின் கோபமடைந்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அவரை கடும் கோபத்துடன் ஸ்டாலின் வறுத்தெடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தை அமைப்பு ரீதியாக இரண்டாக பிரிக்கவும் திட்டமிட்டுள்ள திமுக தலைமை, இளம் ரத்தத்தை மாவட்டச் செயலாளராக்கவும் முடிவு எடுத்துள்ளதாம்.

News August 19, 2025

அமைச்சருக்கு 4 நாள்கள் கெடு

image

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டிட்டோ -ஜாக் ஆசிரியர்கள் அமைப்பு 4 நாள்கள் கெடு விதித்துள்ளது. இந்த 4 நாள்களுக்குள் உரிய அறிவிப்பை வெளியிடாவிட்டால் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, வரும் 22-ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்து இருந்தது.

News August 19, 2025

₹1000 கோடி வாடகை கொடுக்கும் ஆப்பிள்

image

ஐபோனை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் தனது புதிய அலுவலகத்துக்காக ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்துள்ளது. 13 மாடிகளை கொண்ட அந்த அப்பார்ட்மெண்டில் 9 தளங்களை வாடைக்கு எடுத்துள்ள நிறுவனம், டெபாசிட்டாக ₹31.57 கோடியும், மாத வாடகையாக ₹6.3 கோடியும் செலுத்த உள்ளது. 10 வருட லீஸுக்கு எடுத்துள்ள நிலையில், 10 வருடத்தில் வாடகையாக மட்டும் ₹1,000 கோடியை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

News August 19, 2025

கிட்னிக்கு அடுத்து கல்லீரல் மோசடி

image

நாமக்கல்லில் கிட்னி முறைகேட்டை தொடர்ந்து கல்லீரல் மோசடியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 37 வயதான பெண் ஒருவர் தன்னுடைய கடன் காரணமாக ₹8.30 லட்சத்திற்கு கல்லீரலின் ஒரு பகுதியை விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை விசாரிக்க, ஏற்கனவே அம்மாவட்டத்தில் சிறுநீரகம் தொடர்பாக விசாரணை நடத்திய IAS அதிகாரி வினித் தலைமையில் குழு அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

News August 19, 2025

‘ஆளே சேர்க்காமல்’ ஸ்டாலினை ஏமாற்றிய திமுக MLA

image

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக உறுப்பினர் சேர்க்கையில் ‘ஆளே சேர்க்காமல்’, மற்றவர்களைவிட அதிகமாக உறுப்பினர்களை சேர்த்ததாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், MLAவுமான காதர்பாட்சா ரிப்போர்ட் கொடுத்துள்ளார். அவர் சேர்த்ததாக கூறப்படும் உறுப்பினர்கள் யாரும் உண்மையில திமுகவில் சேரவே இல்லை என்பதை, திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் நிறுவனம் கண்டறிந்து, அதை ஒரு ரிப்போர்ட்டாகவும் முதல்வருக்கு கொடுத்துள்ளது.

News August 19, 2025

ரோகித்துக்கு மாற்று யாரும் இல்லை: ராயுடு

image

2027 ODI உலகக்கோப்பை வரை ரோகித் ஷர்மா கேப்டனாக நீடிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வலியுறுத்தியுள்ளார். உலகக்கோப்பை முடியும் வரை ரோகித் ஓய்வை அறிவிக்க கூடாது எனவும், அவரது கேப்டன்சி மற்றும் பேட்டிங்கை வேறு யாராலும் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வீரர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் கேப்டனாக ரோகித் செயல்பட்டதாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.

News August 19, 2025

₹249 ப்ளானை நீக்கியது ஜியோ

image

குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் பேக் ஆக இருந்த ₹249 ப்ளானை ஜியோ நீக்கியது. 28 நாள்கள் செல்லுபடியாகும் இத்திட்டத்தில் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ், இலவச ஜியோ சினிமா உள்ளிட்ட பல சலுகைகள் இருந்தன. தற்போது இந்த குறைந்தபட்ச ப்ளானை ஜியோ நீக்கியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், ₹299 (1.5 GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச பேக் (₹50 கூடுதல்) ஆகியுள்ளது.

News August 19, 2025

Food Poison-இல் முடிந்த ஷூட்டிங் ஹாஸ்பிடலில் 120 பேர் அனுமதி!

image

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ பட ஷூட்டிங் காஷ்மீரின் லே லடாக் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் இரவு உணவு சாப்பிட்ட 600 பேரில், பலருக்கு வாந்தி, மயக்கம் & வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 120 பேர் உடனடியாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது.

News August 19, 2025

கம்யூ., கட்சிகளை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்: முத்தரசன்

image

கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கும் தகுதி இபிஎஸ்-க்கு இல்லை என சிபிஐ செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சிபிஐ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இபிஎஸ் நேர்மையாக இருந்தால் அரசியல் பேச வேண்டும். அதைவிடுத்து அவதூறு பொழியக் கூடாது என்றார். கம்யூனிஸ்ட் கட்சியை தேய்ந்து போன கட்சி என விமர்சிக்கும் அவர், கூட்டணிக்காக மட்டும் எதற்காக ரத்தினக் கம்பளம் விரிப்பதாக கூறுகிறார் என்றார்.

News August 19, 2025

ஜான் பாண்டியன் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகிறது

image

அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தமமுக எந்த தேர்தலிலும் தனித்து போட்டியிடவில்லை. 2021-ல் ADMK கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும், 2024-ல் BJP கூட்டணியில் தாமரை சின்னத்திலும் ஜான்பாண்டியன் போட்டியிட்டார். இதனால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய EC முடிவு எடுத்துள்ளது.

error: Content is protected !!