News May 10, 2024

எழுதித் தருகிறேன், உ.பியில் பாஜக படுதோல்வி அடையும்

image

உ.பியில் பாஜக படுதோல்வி அடையும் என தான் எழுதித் தருவதாக ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாடு முழுவதும் பாஜகவின் தோல்விக்கு உ.பி தான் வழிகாட்டப் போவதாகவும், இங்கு INDIA கூட்டணி மற்றும் அகிலேஷ் யாதவுக்குதான் வெற்றி என்றும் தெரிவித்தார். மேலும், தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் மோடி மன்றாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.

News May 10, 2024

கர்ப்பிணி உயிரிழந்தது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம்

image

கொல்லம் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, ரயிலின் அபாய சங்கிலி செயல்படவில்லை என அப்பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், ரயிலில் எந்தவித தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை எனவும், அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

News May 10, 2024

ஜூன் 2இல் கெஜ்ரிவால் சரணடைய உத்தரவு

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2இல் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக பொதுவெளியில் எதுவும் பேசக்கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டாலும், முதலமைச்சருக்கான பணியில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, இன்று இரவு அல்லது நாளை சிறையில் இருந்து அவர் வெளியில் வருவார் எனத் தெரிகிறது.

News May 10, 2024

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா கெஜ்ரிவால்?

image

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ள நிலையில், பாஜகவுக்கு அவர் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி வலுவாக உள்ள டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று காய் நகர்த்தி வந்த நிலையில், இந்த ஜாமின் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் மே 25இல் தேர்தல் நடைபெற உள்ளது.

News May 10, 2024

‘ஸ்டார்’ படத்தின் திரைவிமர்சனம்

image

நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், சினிமாவில் நடிகனாக, ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே ‘ஸ்டார்’ படத்தின் கதை. கவினின் அசாதாரண நடிப்பும், யுவனின் இசையும் படத்திற்கு இரு தூண்கள். ஒரு சில காட்சிகளில் ஆங்காங்கே தொய்வுகள் இருந்தாலும், திரைக்கதை படத்தின் வேகத்தை குறைக்கவில்லை. காதல், கண்ணீர், வேதனை, பாசம் என அனைத்து எமோஷன்களும் இதில் உள்ளது. Way2News Rating: 2.5/5

News May 10, 2024

தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை காவலன் நான்: மோடி

image

நாட்டில் மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் வரை, மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது என பிரதமர் சூளுரைத்துள்ளார். மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் பிரசாரம் செய்த அவர், தான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலன் என்றார். வளர்ச்சியில் தன்னுடன் போட்டியிட முடியாது என்பதை அறிந்த காங்கிரஸ், பொய்களின் தொழிற்சாலைகளைத் திறந்து தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

News May 10, 2024

ஓய்வை அறிவித்தார் நியூசி., வீரர் காலின் முன்ரோ

image

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசி., அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ அறிவித்துள்ளார். 123 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள அவர், 2013ஆம் ஆண்டு முதல்முறையாக நியூசி., அணிக்காக களமிறங்கினார். ஆனால், அணியில் பெரியளவில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், T20 உலகக் கோப்பையிலும் இடம் கிடைக்காததால், ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News May 10, 2024

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

image

கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில், சிம்பு நடிக்கக் கூடாது என ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிம்புவுக்கு ரெட் கார்டு எச்சரிக்கை போடப்பட்டுள்ள நிலையில், அவர் தக் லைஃப் படத்தில் எப்படி நடக்கலாம் என்றும், ஒப்புக்கொண்டபடி கொரோனா குமார் படத்தை சிம்பு முடித்துக் கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

News May 10, 2024

தேர்தல் பரப்புரையில் ஈடுபட கெஜ்ரிவாலுக்கு அனுமதி

image

ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம், தேர்தல் பரப்புரையில் ஈடுபடவும் அனுமதி வழங்கியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21இல் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவுகள் உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வகையில் ஜாமின் வழங்க வேண்டும் என்ற கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.

News May 10, 2024

BREAKING: கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் தேர்தலை காரணம் காட்டி ஜாமின் கோரி இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!