News May 10, 2024

12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை

image

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இரவு 10 முதல் 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும், இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News May 10, 2024

கெஜ்ரிவால் வழக்கு – கடந்து வந்த பாதை (2/3)

image

*பிப்., 7, 2024: ED அளித்த புதிய புகாரின்பேரில், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. *மார்ச் 21, 2024: கெஜ்ரிவாலை ED கைது செய்தது. *ஏப்., 9, 2024: EDஇன் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மார்ச் 23 ஆம் தேதி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. *10 ஏப்., 2024: ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

News May 10, 2024

கெஜ்ரிவால் வழக்கு – கடந்து வந்த பாதை (1/3)

image

*நவ., 2021: டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. *ஜூலை 2022: டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆராய CBI விசாரணைக்கு பரிந்துரைத்தார்.*ஆக., 2022: முறைகேடுகள் தொடர்பாக CBI & ED வழக்குகளைப் பதிவு செய்தன.* செப் 2022: டெல்லி அரசு மதுபானக் கொள்கையை ரத்து செய்தது. *அக்., 2023 – ஜன., 2024: விசாரணைக்கு ஆஜராகும்படி, ED கெஜ்ரிவாலுக்கு 5 சம்மன்களை அனுப்பியது.

News May 10, 2024

அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறும் சிஎஸ்கே

image

குஜராத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகின்றனர். 232 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 1 ரன்னில் அவுட் ஆனார்கள். அதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கெய்க்வாட் டக் அவுட் ஆனார். 4 ஓவர் முடிவில் சென்னை, 3 விக்கெட் இழந்து 22 ரன் எடுத்துள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்?

News May 10, 2024

20 லட்சம் மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்க உத்தரவு

image

20 லட்சம் மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்க தொலைத் தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு 28,200 செல்ஃபோன்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக காவல்துறை அளித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு, DoT ஆய்வு செய்தது. அதில் அந்த செல்ஃபோன்களில் 20 லட்சம் எண்கள் பயன்படுத்தப்பட்டது தெரிந்ததால், செல்போன்களை முடக்கவும், அந்த எண்களை மீண்டும் சரிபார்க்கவும் DoT உத்தரவிட்டது.

News May 10, 2024

தங்கம் விலை ₹85,000 வரை உயரலாம்!

image

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹85,000 வரை உயரலாம் என்று கமாடிட்டி சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து மத்திய வங்கி, வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதால் அமெரிக்க டாலரின் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டாலர் விலை வீழ்ச்சி, உள்நாட்டு தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கரன்சி சந்தையில் லாப முன்பதிவு தூண்டப்பட்டு, தங்கம் விலை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

News May 10, 2024

பிரிஜ்பூஷணுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம்

image

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளன கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம் என அவர் மீது குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தங்களின் நீண்ட போராட்டத்தால் பிரிஜ்பூஷண் மீது நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், இதை வரவேற்பதாகவும் கூறினார்.

News May 10, 2024

காங்கிரஸ் வேட்பாளர் சர்ச்சை பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு

image

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 மனைவி இருப்பவர்களுக்கு, மகாலட்சுமி திட்டத்தில் ஆண்டுக்கு ₹2 லட்சம் வழங்கப்படும் என ம.பி., காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பேச்சு தொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

கருடன் திரைப்பட புதிய போஸ்டர் வெளியீடு

image

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படத்தில் சமுத்திரகனி, சூரி, உன்னி முகுந்தன், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

News May 10, 2024

சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு

image

குஜராத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான கில் (104) மற்றும் சாய் சுதர்சன் (103) சென்னை அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அடுத்தடுத்து சதமடித்தனர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை சேர்த்தது.

error: Content is protected !!