India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஷ்மிகாவைப் போல பாலிவுட்டில் தானும்
வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என மாளவிகா மோகனன் விரும்புவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. சித்தாந்த் சதுர்வேதிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘யுத்ரா’ படம் விரைவில் வெளிவரவுள்ளது. இப்படம் ரிலீசாவதற்கு முன்னரே அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய கதைகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்துவருவதால், பாலிவுட்டின் பதற்றம் கூடியிருக்கிறது.
2030ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ₹1 லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “தங்கம் வாங்க மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய திருதியை நாளில் மட்டும் 25,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. இதே நிலை தொடரும் என்பதால் 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு சவரன் தங்கம் ₹1 லட்சம் என்ற அளவில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
உலகளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள், விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்றுவரை சுமார் 8,000 செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், தற்போது 3,000 செயற்கைக் கோள்கள்தான் இயங்குகின்றன. மீதமுள்ள செயல்படாத செயற்கைக் கோள்கள், குப்பைகளாக (ஏறத்தாழ 9,000 மெட்ரிக் டன்) விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கின்றன.
மக்களவைக்கான 3ஆம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 93 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்து ஏற்கெனவே 2 முறை புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, 3ஆவது முறையாக வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், மொத்தம் 65.68% வாக்குகள் பதிவானதாகவும், அதில் 66.89% ஆண்கள் , 64.41% பெண்கள், 25.2% மூன்றாம் பாலினத்தவர் எனக் கூறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் புதிய ஜெர்சியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில், “உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான எங்கள் அணியின் புதிய ஜெர்ஸி இங்கே. #LankanLions” என குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் தேசியக்கொடியில் உள்ள சிங்கம் பொறிக்கப்பட்ட நீல நிறத்திலான இந்த புதிய ஜெர்ஸி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிஷாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்று கூறினார். மேலும், ஒடிஷாவில் பாஜக வென்று ஆட்சியமைக்கும் என்றும், மண்ணின் மைந்தர் ஒருவரை பாஜக முதல்வராக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஈரோடு, சேலம், பெரம்பலூர், மதுரை, நீலகிரி, நாமக்கல்லில் இடியுடன் மிதமான மழையும், விருதுநகர், ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், குமரி, தென்காசி, நெல்லையில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மழை காரணமாக சில இடங்களில் நீர் தேங்கும் அபாயம் உள்ளது.
2020ஆம் ஆண்டில், சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்குப் பின் சரிவைச் சந்தித்த சீனத் தயாரிப்பு செல்ஃபோன்களின் விற்பனை விகிதம் தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. Xiaomi, Oppo, Vivo, Realme, Transsion & Motorola போன்ற சீன நிறுவனங்களின் செல்ஃபோன்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு மார்ச்சில் 75%-ஐ தொட்டது. அதேபோல், ₹25,000 – ₹50,000 வரம்பில் உள்ள ஃபோன்களின் சந்தைப் பங்கு 18% ஆக அதிகரித்துள்ளது.
மத்தியில் ஆட்சியிலிருந்தபோது காங்கிரஸ் கூட்டணி, ₹12 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் முதல்வராக 23 ஆண்டு, பிரதமராக 10 ஆண்டு மோடி பதவி வகித்த காலத்தில் அவர் மீது எந்த ஊழல் புகாரும் எழவில்லை என அமித் ஷா தெரிவித்துள்ளார். கோடை காலம் வந்ததும் சிலர் ஓய்வெடுக்க வெளிநாடு செல்வதாகவும், ஆனால், மோடியோ 23 ஆண்டுகளில் தீபாவளிக்கு கூட விடுமுறை எடுக்கவில்லை என்றார்.
பாலிவுட்டைப் பொறுத்தவரை ஒரு படம் ஹிட்டானால்தான் மறுபடியும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஃபார்முலா இருப்பதாக நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழ் ரசிகர்களிடம் தனக்கு வரவேற்பு கிடைத்ததாகவும், தனது படங்கள் வெற்றி பெறாவிட்டாலும், திறமையை பார்த்து நிறைய வாய்ப்புகள் வந்ததாகவும் தெரிவித்தார். பாலிவுட்டுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான் என்றார்.
Sorry, no posts matched your criteria.