News May 11, 2024

சுக்கிரனால் கோடிகளை அள்ளப் போகும் ராசிகள்

image

நவகிரகங்களில் சொகுசு நாயகனான சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். அந்த வகையில் ஏற்பட்ட இடம் மாற்றத்தால் மேஷம், தனுசு, கன்னி, கும்பம் ராசியினருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகிறது. வாழ்க்கை துணையின் ஆதரவு, உடல்நிலையில் முன்னேற்றம், வீடு, வாகனம் வாங்கும் யோகம், கோடி, கோடியாய் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு என மேற்கண்ட ராசியினருக்கு பண வரவு அமோகமாக இருக்கும்.

News May 11, 2024

போராடிய வீராங்கனைகளுக்கு கிடைத்த வெற்றி

image

WFI முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வரவேற்றுள்ளார். இது குறித்து பேசிய அவர்,”வெயில், மழை என பாராமல் போராடிய மல்யுத்த வீராங்கனைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. நீதிமன்றத் தீர்ப்பு ஆறுதலாக அமைந்துள்ளது. வீராங்கனைகளை கேலி செய்தவர்கள் தற்போது வெட்கப்படட்டும்” என்றார்.

News May 11, 2024

துறை வாரியாக செயல் திட்டங்கள் வகுக்க உத்தரவு

image

போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க துறை வாரியாக செயல் திட்டம் வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உள்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் தனித்தனியாக செயல்திட்டத்தை வகுத்து ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க, தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம், துறை வாரியான செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருளை தடுக்க முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News May 11, 2024

பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

image

அதானி போன்ற தொழிலதிபர்களிடம் ராகுல் காந்தி நிதி பெற்றதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, “அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியபோது, ED & உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது. காங்கிரஸ் கருப்புப் பணம் வாங்கியது தொடர்பாக பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News May 11, 2024

காவலர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

திருச்சி-திண்டுக்கல் சாலையில் விபத்தில் காவலர் விக்னேஷ்குமார் உயிரிழந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர் விக்னேஷ்குமாரின் மறைவு, தமிழக காவல்துறைக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பு எனக் கூறியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவுடன் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

உலக அளவில் வரவேற்பை பெற்ற “SPY” திரைப்படங்கள்

image

உலக அளவில் வரவேற்பை பெற்ற “SPY” திரைப்படங்களை தெரிந்து கொள்ளலாம். *தி பார்ன் சுப்ரிமேஷி *தி பார்ன் அல்டிமேட்டம் *கேசினோ ராயல் *தி பார்ன் ஐடென்டி *ஸ்கை பால் *தி டே ஆப் த ஜேக்கல் *ஸ்பை கேம் *டாக்டர் நோ *கோல்ட் பிங்கர் *ஸ்பெக்டர் *பேட்ரியாட் கேம்ஸ் *தன்டர்பால் *ட்ரூ லைஸ் *எனிமி ஆப் தி ஸ்டேட் *டைமண்ட்ஸ் ஆப் பார்எவர் *சால்ட் *மிஷன் இம்பாசிபிள் *ரோனின் *முனிச் *ஆர்கோ *ஹானா

News May 11, 2024

தோனியை சந்திக்க அத்துமீறிய மாணவர் கைது

image

சிஎஸ்கே வீரர் தோனியை சந்திக்க அத்துமீறி மைதானத்துக்குள் புகுந்த இளைஞரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். அகமதபாத்தில் குஜராத் டைடன்ஸ், சென்னை அணிக்கு இடையேயான போட்டி இடைவேளையின்போது, மைதானத்துக்குள் இளைஞர் புகுந்து ஓடினார். அவரை அங்கிருந்த காவலர் ஒருவர் மடக்கிப் பிடித்தார். விசாரணையில் அவர் கல்லூரி மாணவர் என்பதும், தோனியை பார்க்க அத்துமீறி மைதானத்துக்குள் புகுந்ததும் தெரிய வந்தது.

News May 11, 2024

விண்ணை முட்டும் இளநீர் விலை

image

ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிக்க, மக்கள் அதிகளவு இளநீரை பருகுவர். இந்நிலையில், ₹20-₹40 வரை விற்பனையான இளநீர், தற்போது ₹60-₹80 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, செவ்விளநீர் ₹100 வரை விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் பணச் சுமையை மேலும் அதிகரிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News May 11, 2024

மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்

image

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் பொது அழைப்பை விடுத்திருந்தனர். இதனை ஏற்பதாகக் கூறிய ராகுல் காந்தி, மக்களுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் தங்களின் பார்வைகளை முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான நல்ல முன்னெடுப்பாக இந்த விவாதம் அமையட்டும் என்று வரவேற்றுள்ளார்.

News May 11, 2024

F.D. டெபாசிட் வட்டியை மாற்றியமைத்த வங்கிகள்

image

ரூ.2 கோடி வரை 400 நாள்கள் F.D. செய்யும் சாதாரண மக்களுக்கு 5%- 7.25% வரையும், மூத்த குடிமக்களுக்கு 5%- 7.75% வரை வட்டி வழங்கப்படுமென CUB தெரிவித்துள்ளது. 18 முதல் 24 மாதங்களுக்கு ரூ.2 கோடி வரை டெபாசிட் செய்யும் சாதாரண மக்களுக்கு 8%, மூத்த குடிமக்களுக்கு 8.50% வட்டி வழங்கப்படுமென RBL தெரிவித்துள்ளது. உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, கேபிடல் ஸ்மால் பைனான்ஸ் வங்கியும் F.D. வட்டியை மாற்றியுள்ளன.

error: Content is protected !!