News May 12, 2024

கூகுள் மேப்பால் தூங்கியோர் மீது ஏறிய கார்

image

சென்னை அசோக் நகரில் தெருவில் தூங்கியோர் மீது திடீரென கார் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னைக்கு விசேஷத்துக்காக வந்தவர்கள் தெருவில் தூங்கியுள்ளனர். அப்போது கூகுள் மேப் உதவியுடன் வந்த வடமாநில பெண் ஒருவர் முட்டு சந்து என்று தெரியாமல் தூங்கியோர் மீது காரை ஏற்றியிருக்கிறார். நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. பொது மக்கள் அப்பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

News May 12, 2024

டி20: பாக்., எதிரான தொடரை கைப்பற்றுமா அயர்லாந்து?

image

அயர்லாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2ஆவது டி20 கிரிகெட் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாக். அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே, இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற அயர்லாந்து அணி தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 12, 2024

எதிர்க்கட்சிகள் சாக்குப்போக்கு தேடுகிறது

image

இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு கிடைக்கும் ஆதரவை கண்டு எதிர்க்கட்சிகள் விரக்தி அடைந்துள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். மோடிக்கு 75 வயது ஆனதும், அமித் ஷா பிரதமராவார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதற்கு தனது X பக்கத்தில் பதிலளித்துள்ள யோகி, மோடியின் வயதை காட்டி எதிர்க்கட்சிகள் சாக்குப்போக்கு தேடுவதாகக் கூறினார்.

News May 12, 2024

அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும் சூர்யா?

image

தமிழகம் முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த நடிகர் சூர்யா முடிவெடுத்துள்ளார். தற்போது, 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில், இதில், வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும், எதிர்கால திட்டமிடலை முன்வைத்தும் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் விஜய்யை தொடர்ந்து, சூர்யாவும் அரசியலுக்கு அடித்தளம் இடுகிறாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

News May 12, 2024

கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

image

கிராண்ட் செஸ் டூர் தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். போலந்தில் நடக்கும் இத்தொடரில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், நேற்றைய போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம் கார்ல்சன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் சீனாவைச் சேர்ந்த Wei Yi, 3வது இடத்தில் பிரக்ஞானந்தா உள்ளனர்.

News May 12, 2024

ஒரே நாளில் ₹105 கோடி வருவாய்

image

அட்சய திருதியை தினத்தன்று (10.05.2024) தங்கத்தில் முதலீடு செய்தது போலவே ரியல் எஸ்டேட்டிலும் மக்கள் அதிகளவு முதலீடு செய்திருக்கின்றனர். அன்று மட்டும் தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறைக்கு ₹105 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. இதன் மொத்த மதிப்பை கணக்கிட்டால், சுமார் ₹15 ஆயிரம் கோடிக்கு பரிவர்த்தனை நடைபெற்றிருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News May 12, 2024

70 வயதைக் கடந்த எடப்பாடி பழனிசாமி

image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 12) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒரு அடிமட்ட தொண்டனால் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கும் அளவிற்கு வளர முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் EPS. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுக சிதறிப் போகும் என்று பலரும் விமர்சித்த நிலையில், அதனை உடையாமல் கட்டிக் காத்து ஆளுமையை வெளிப்படுத்தி வரும் EPSக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

News May 12, 2024

நடிகை கரீனா கபூருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

image

புத்தகத்தில் ‘பைபிள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை எதிர்த்த வழக்கில், நடிகை கரீனா கபூருக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிதி ஷா பீம்ஞானி என்பவருடன் இணைந்து அவர் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். ‘கரீனா கபூர் கானின் பிரெக்னன்சி பைபிள்’ என்ற பெயரில் அந்த புத்தகம் 2021ஆம் ஆண்டு வெளியானது. இந்த புத்தகத்திற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

News May 12, 2024

12 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பிஜப்பூர் மாவட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 12 துப்பாக்கிகள், வெடிமருந்துகள், சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News May 12, 2024

CSK vs RR இன்று மோதல்

image

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு பிரச்னையின்றி முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று பிளே-ஆஃப் சுற்றை நெருங்கி உள்ளது.

error: Content is protected !!