News May 12, 2024

திமுக அரசு அலட்சியமாக இருக்கிறது: பி.ஆர்.பாண்டியன்

image

டெல்டாவில் ஒருபோக சாகுபடிக்குக்கூட தண்ணீர் இல்லாமல் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பதாகக் கூறிய அவர், காவிரியின் உரிமையைப் பெற தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News May 12, 2024

பங்குச்சந்தையை பதம் பார்க்கும் தேர்தல்

image

மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்து, பங்குச்சந்தை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் முடிவுகள் குறித்த சமீபத்திய சமிக்ஞை, பங்குகளின் சரிவுக்கு வித்திட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும், சந்தை சற்று சரிந்து பின் உயர வாய்ப்பிருப்பதாகவும், பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் பெரும் சரிவை எதிர்பார்க்கலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

News May 12, 2024

நாகை – இலங்கை கப்பல் சேவை தேதியில் மாற்றம்

image

நாகை – இலங்கை காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்க இருந்தது. இதற்கான சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடந்த நிலையில், திடீரென நாளைய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மே 13 – 16 வரை பயணம் செய்வதற்கு பதிவு செய்தவர்களின் பயணத் தேதி மே 17க்கு மாற்றப்பட்டுள்ளது. நாகைக்கு கப்பல் வருவது தாமதம் ஆனதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும் தேதி மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

News May 12, 2024

போலீசின் விரலைக் கடித்தவர் கைது

image

ஆவடியைச் சேர்ந்த மணி ராஜாவை அவரது முதலாளி வேலையை விட்டு நீக்கிவிட்டார். இதனால், முதலாளியுடன் சண்டை போட்டதில் அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற போதையில் சென்னை GHக்கு வந்துள்ளார் மணி ராஜா. அங்கும் அவர் தகராறு செய்ததால் பணியில் இருந்த போலீசார் மணி ராஜாவை வெளியே போகச் சொன்னார். அப்போது ஆத்திரத்தில் போலீசின் விரலை மணி ராஜா கடித்ததால் கைது செய்யப்பட்டார்.

News May 12, 2024

3 வாரத்திற்கு பின் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வு

image

தொடர்ந்து 3 வார சரிவுக்குப் பிறகு, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.66 பில்லியன் டாலர் அதிகரித்து, 641.59 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மே 3ஆம் தேதி கணக்கீட்டின்படி, தங்கம் கையிருப்பு 653 மில்லியன் டாலர் குறைந்து, 54.88 பில்லியன் டாலராக உள்ளது. Special Drawing Rights (SDRs) பொறுத்தமட்டில், 2 மில்லியன் டாலர் உயர்ந்து, 18.05 பில்லியன் டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

News May 12, 2024

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை கொட்டும்

image

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மே 16ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு சில இடங்களில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News May 12, 2024

360 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு

image

மக்களவைத் தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 1,710 வேட்பாளர்களில், 360 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும், 476 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாகவும், 24 பேரிடம் எந்த சொத்தும் இல்லை எனவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர். அவர்களில் 11 பேர் மீது கொலை வழக்கும், 5 பேர் மீது பாலியல் வழக்குகளும் பதிவாகியுள்ள நிலையில், 17 பேர் பல வழக்குகளில் தண்டனையும் பெற்றுள்ளனர்.

News May 12, 2024

நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு

image

ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் வேட்பாளர் ரவிச்சந்திரா ரெட்டிக்கு ஆதரவாக அவர் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, விமான நிலையத்தில் இருந்து ரவிச்சந்திரா வீடு வரை பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், அனுமதியின்றி பேரணி சென்றதாக அல்லு அர்ஜூன் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News May 12, 2024

முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்ற கொல்கத்தா

image

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று அதிகாலை மும்பைக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்த சாதனையை அந்த அணி படைத்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News May 12, 2024

வாழ்நாளில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டிய நாடுகள்

image

வாழ்நாளில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டிய நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. ‘CEOWORLD’ என்ற இதழ் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில், தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து கிரீஸ், இந்தோனேஷியா, போர்ச்சுக்கல், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பெரு, இத்தாலி, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில், நீங்கள் செல்ல விரும்பும் நாடு எது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

error: Content is protected !!