News May 12, 2024

பிரச்னை கூகுள் மேப் இல்ல. மது போதையாம்

image

சென்னை அசோக் நகரில் சாலையில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய வட இந்தியப் பெண் ஷில்பா மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கமான முட்டு சந்துக்குள் காரை ஓட்டி வந்த அவர், கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். பின்னர், அவருக்கு போதைப் பொருள் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News May 12, 2024

IPL: கொல்கத்தா வீரருக்கு அபராதம் விதிப்பு

image

விதி மீறலில் ஈடுபட்டதாக KKR வீரர் ரமன்தீப் சிங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஐபிஎல் நடத்தை விதி 2.20இன் கீழ் ரமன்தீப் சிங் லெவல் 1 குற்றத்தைச் செய்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 20% அபராதம் செலுத்தும்படி நடுவர் உத்தரவிட்டார். இது KKR அணிக்கு விதிக்கப்படும் 2ஆவது அபராதம் ஆகும்.

News May 12, 2024

வண்ணப் பட்டுடுத்திய வான மகள்

image

சூரியப் புயல் பூமியைத் தாக்கும்போது காந்தவிசையின் காரணமாக அவை வட மற்றும் தென் துருவங்களை நோக்கி பாயும். முடிவில், அந்த இரண்டு துருவங்களிலும் வண்ணமயமான காட்சிகள் தோன்றும். அப்படியான ஒரு அதிசய நிகழ்வுதான் மூன்று நாள்களாக நிகழ்ந்து வருகிறது. 10ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளில் தெரிந்த இந்த ஆரோரா என்னும் வண்ண வானம், நேற்று இரவு நியூசிலாந்து நாட்டில் தென்பட்டது.

News May 12, 2024

ஆப்கானிஸ்தானில் 300 பேர் பலி

image

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஆக அதிகரித்துள்ளது. காபூல், பாஹ்லான் உள்ளிட்ட மாகாணங்களில் பெய்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், நேற்று ஒரே நாளில் 200 பேர் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

News May 12, 2024

தோனி ஓய்வு பெற வேண்டுமா? வேண்டாமா?

image

மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிக்காமல் ஐபிஎல் தொடர்களில் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேநேரம், நடப்பு தொடரிலேயே அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு ஓடமுடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு, அவரிடம் ஓய்வு குறித்து கேட்கையில், “ரசிகர்களை குஷிப்படுத்த விளையாடுவேன்” என்று கூறினார். இந்த ஆண்டு அவர் என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது.

News May 12, 2024

இபிஎஸ்ஸுக்கு வாழ்த்து சொன்ன விஜய்

image

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸுக்கு, தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இபிஎஸ் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், இபிஎஸ்ஸுக்கு வாழ்த்து கூறியுள்ளார். முன்னதாக, அவர் ஸ்டாலின், அன்புமணி ஆகியோருக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.

News May 12, 2024

ஜெயக்குமார் மரணத்தில் சிக்கியது டார்ச்லைட்

image

மறைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கடைசியாக வாங்கிய டார்ச் லைட், அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. முழுவதும் எரிந்த நிலையில் டார்ச்லைட் மீட்கப்பட்டதால், அது தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. அவர் கடைசியாக டார்ச்லைட் வாங்கிய சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியானது. முன்னதாக, அவரது வீட்டில் கிடைத்த டார்ச்சையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்தனர்.

News May 12, 2024

ஆந்திராவில் மும்முனை போட்டி

image

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி, YSR காங்கிரஸ், காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. தெலுங்கு தேசம் கூட்டணியில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இடம்பெற்றுள்ளன. முதல்வரும், YSR காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாதான், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்.

News May 12, 2024

தோனிக்கு இன்று சென்னையில் கடைசிப் போட்டி?

image

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சென்னை மைதானத்தில் இன்று கடைசி போட்டியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. லீக் தொடரில் சென்னை மைதானத்தின் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. ஒருவேளை CSK அணி, ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையாவிட்டால் நடப்பு தொடரில் இதுவே கடைசி போட்டியாக அமையும். தோனி ஓய்வை அறிவித்தால் இன்றுதான் அவருக்கு சென்னையில் கடைசி போட்டியாக இருக்கும்.

News May 12, 2024

அன்னையர் தின சிறப்புத் திரைப்படங்கள்

image

அன்னையர் தினத்தில் பார்க்க வேண்டிய உணர்வுப்பூர்வமான தமிழ் படங்கள்: ▶தியாகராஜன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அன்னை ஓர் ஆலயம்’, ▶மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ▶அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘ராம்’, ▶சசிகுமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’, ▶மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் நடித்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ▶தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி’.

error: Content is protected !!