India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே 30ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்தின் ‘பட்டணப் பிரவேசம்’ நடைபெறும் என்று ஆதீன நிர்வாகம் அறிவித்துள்ளது. ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆதீனத்தை சீடர்கள் பல்லக்கில் தூக்கி சுமக்கும் நிகழ்வே பட்டணப் பிரவேசம் ஆகும். 2022ஆம் ஆண்டு ‘மனிதனை மனிதனே சுமப்பதா’ என்று இந்நிகழ்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், மீண்டும் பட்டணப் பிரவேச நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 157/6 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 19ஆவது ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய, சிக்கந்தர் ராசா (72*), பிரையன் பென்னட் (70) இருவரும் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களில் ஏறுவோரின் எண்ணிக்கையை குறைக்குமாறு, அரசுக்கு நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வசந்த காலத்தில் நூற்றுக்கணக்கான சாகசப் பயணிகள் சிகரங்களில் ஏறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில், மலைகளின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், கழிவு மேலாண்மை மற்றும் மலைகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
வெயில் காலங்களில் பலரால் ஏசி இல்லாமல் தூங்க முடியாது. ஆனால், ஏசியில் இருந்து பரவும் நுண் துகள்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதற்கு, பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தலைவலி, சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் ஏசியின் வெப்பநிலையை படிப்படியாக உயர்த்த வேண்டும். ஏசியை பயன்படுத்துவதால் தசைகளில் இறுக்கத்தை உணர்பவர்கள், போர்வையை போர்த்தி சருமத்தை பாதுகாக்கலாம்.
KKR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், மும்பை வீரர் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து, சுனில் நரைன், ரிங்கு சிங்கின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான (20 Wickets) பர்பிள் கேப்பை பெற்றார். மேலும், ஒரு சீசனில் 4 முறை 20 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற சவுண்ட் ரன்னிங் டிராக் ஃபெஸ்ட் சர்வதேச தடகளப் போட்டியில், இந்திய வீராங்கனை தீக்ஷா புதிய சாதனை படைத்துள்ளார். மகளிருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில், 4:04.78 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதனால், 2021இல் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 4:05.39 வினாடிகளில் ஓடிய ஹர்மிலன் பெயின்ஸின் முந்தைய தேசிய சாதனையை தீக்ஷா முறியடித்துள்ளார்.
‘ரோமியோ’ படம் பார்த்த ரசிகர் ஓருவர், நடிகர் விஜய் ஆண்டனியிடம் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. X பக்கத்தில் பதிவிட்ட அவர், இனிமேல் ஆன்லைனில் பணம் வாங்கிக் கொண்டு அல்லது படங்களை பாரபட்சமாக விமர்சிப்பவர்களின் கருத்துக்களைக் கேட்க மாட்டேன் என்றும், ட்ரெய்லரும் முன்னோட்டமும் தனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த இவர், மத்திய வெளியுறவு அமைச்சராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் உடனான தனது 50 ஆண்டுகால தொடர்பை முறித்துக் கொண்டு, 2017ல் பாஜகவில் இணைந்த அவர், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்தியாவில் மின் நுகர்வு தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மின் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, இந்த ஆண்டிற்கான கோடை காலத்தில் உச்சபட்ச மின் தேவை 260 ஜிகா வாட்டாக இருக்கும் என மின்துறை அமைச்சகம் கணித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உச்சபட்ச மின் தேவை 224 ஜிகா வாட்டாக இருந்த நிலையில், இம்மாதம் 235 ஜிகாவாட்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.