India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. கவுதமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆகப் பதிவாகியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பிரபல நடிகர் மோகன், “ஹரா” எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள அந்தப் படத்தில், சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அந்த படம் ஜூன் 7இல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. நீண்ட நாள்களுக்கு பிறகு வெளியாகும் மோகன் படம் என்பதால், அந்த படம் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘அயர்ன் செய்யாத ஆடை அணிவோம்’ என்ற பிரசாரத்தை CSIR தொடங்கியுள்ளது. ஓர் ஆடையை இஸ்திரி செய்வது கூட கார்பன் (CO₂) உமிழ்விற்கு வழிவகுப்பதால், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, திங்கட்கிழமைகளில் அயர்ன் செய்யப்படாத ஆடைகளை ஊழியர்கள் அணியலாம் என CSIR தெரிவித்துள்ளது. CSIR-இன் 37 தேசிய ஆய்வகங்களில் 7,683 பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 தொடரில் தொடர்ந்து 3 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இன்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு முன்பு, கடந்த 2ஆம் தேதி நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 1 ரன் வித்தியாசத்திலும், கடந்த 7ஆம் தேதி டெல்லி அணியிடம் 20 ரன் வித்தியாசத்திலும் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது.
பொறியியல் படிப்பில் சேர, இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். +2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, உயர்கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மே 6 முதல் தற்போதுவரை 1,00,699 மாணவர்கள் BE படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதில், 56044 மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 27755 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர்.
பெங்களூருவில் இன்று நடக்கும் போட்டியில் டெல்லி, ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இது ஆர்சிபி வீரர் கோலியின் 250ஆவது ஐபிஎல் போட்டியாகும். தோனி, ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் 250க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால் ஒரே அணிக்காக விளையாடவில்லை. கோலி மட்டுமே ஒரே அணிக்காக விளையாடுகிறார். இதனால் ஒரே அணிக்கு 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
வேலைக்கு செல்லும் 21- 25 வயது ஆணுக்கு திருமணம் செய்யும் வழக்கம் முன்பு இருந்தது. ஆனால் அண்மைக் காலமாக இது மாறி வருகிறது. ஊதியம் அதிகரித்ததும் திருமணம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதால், 40 வயதை கடந்தும் பலர் மணமுடிக்காமல் உள்ளனர். இதன்பிறகு அவர்கள் திருமணம் செய்தால், குடும்ப வாழ்க்கையில் பல பிரச்னைகள் ஏற்பட இது வழிவகுக்கும். இதை மனதில் வைத்தே முன்னோர்கள், திருமணத்தை நிர்ணயித்தார்கள்.
ப்ளே ஆப் வாய்ப்பை சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்துடன் சென்னை அணி இன்று விளையாடியது. சிறப்பாக விளையாடி சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அணிகளுக்கான புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்துக்கு சிஎஸ்கே முன்னேறியது. இதன்மூலம் ப்ளே ஆப்புக்கு தகுதி பெறும் வாய்ப்பை சென்னை தக்க வைத்தது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். பிகார் மாநிலம் சமஸ்திபூருக்கு அவர் தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது அந்த ஹெலிகாப்டரில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் பிகார் மாநில செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். மழை காரணமாக தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.