News May 12, 2024

தேமுதிகவினர் மீது வழக்குப்பதிந்த போலீசார்

image

தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெறாமல் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்ற தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி சென்றார். அவருக்கு பின்பாக தேமுதிக தொண்டர்களும் வாகன பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.

News May 12, 2024

உயரும் ஆணுறுப்பு புற்றுநோயாளர் எண்ணிக்கை!

image

2050இல் ஆணுறுப்பு புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 77%க்கும் அதிகமாக உயரும் என்று குளோபல் கேன்சர் ரெஜிஸ்ட்ரி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், 2023இல் உலகளவில் 13,211 பேர் இந்நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான வளரும் நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க HPV தடுப்பூசி போட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News May 12, 2024

இந்தியா முழுவதும் சாதிய பாகுபாடுகள் உள்ளன

image

சினிமாவில் சாதியைப் பற்றி பேசும் இயக்குநர் வெற்றிமாறன் போன்றவர்களை மக்கள் ஒதுக்க வேண்டும் என்று இயக்குநர் பிரவீன் காந்தி கூறியிருந்தார். இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், இந்தியா முழுவதும் சாதிய கொடுமைகள் நடக்கிறது. அதற்கு பல சம்பவங்கள் உதாரணமாக இருக்கின்றன. நாட்டில் சமூக ஏற்றத்தாழ்வு, பாகுபாடு இல்லையென சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் எனத் தெரியவில்லை என்று கூறினார்.

News May 12, 2024

அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி

image

அண்ணா – முத்துராமலிங்கத்தேவர் குறித்து பேசிய தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழ்நாடு அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார். இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய முகாந்திரம் இருப்பதாகக் கூறி, தமிழக அரசு ஆளுநர் R.N.ரவிக்கு பரிந்துரை செய்தது. ஓராண்டு கழிந்த நிலையில், அண்ணாமலை மீது வழக்குப் பதிய ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

News May 12, 2024

குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நயன்

image

குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை நடிகை நயன்தாரா கொண்டாடினார். அன்னையர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து, நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் வீடியோ பகிர்ந்துள்ளார். அதில் தனது குழந்தைகளான உயிர், உலகுடன் நயன்தாரா விளையாடும் காட்சி உள்ளன. நீதான் என்னுடைய உயிர், உலகம் என அந்த வீடியோவில் நயன்தாரா பதிவுகளை வெளியிட்டுள்ளார். இதை நயன்தாரா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

News May 12, 2024

டெல்லி அணிக்கு 188 ரன்கள் இலக்கு

image

ஐபிஎல் தொடரின் 62ஆவது லீக் போட்டியில் டெல்லி அணிக்கு 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி. சின்னசாமி மைதானத்தில் முதலில் விளையாடிய RCB, 187/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, படிதர் 52, ஜாக்ஸ் 41, கிரீன் 32 ரன்கள் எடுத்தனர். DC தரப்பில், கலீல் அஹமது, ராஷிக் சலாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? கமெண்ட்ல சொல்லுங்க.

News May 12, 2024

ஆந்திரா, ஒடிசாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல்

image

மக்களவை 4ஆம் கட்டத் தேர்தலுடன் சேர்த்து, ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திர சட்டப்பேரவையில் உள்ள 175 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதேபோல் ஒடிசா சட்டப்பேரவையில் உள்ள 147 தொகுதிகளில் 28க்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

News May 12, 2024

பயனர்களின் உண்மைத் தன்மையை அறிய E-KYC

image

வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, E-KYC பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், பயனாளர்களின் கைரேகை மற்றும் முகம் பதிவு செய்யும் முறையை மேற்கொள்வதாகக் கூறியுள்ள எண்ணெய் நிறுவனங்கள், கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும், தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளன.

News May 12, 2024

அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்கும் இலங்கை

image

அதானியின் கிரீன் எனர்ஜியிடமிருந்து அடுத்துவரும் 20 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மன்னார் & பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை கிரீன் எனர்ஜி அமைக்க உள்ளது. இந்த நிலையங்களில் 484 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு (கிலோவாட் ஹவருக்கு) $8.26 அமெரிக்க டாலரை கொடுக்க இலங்கை அரசு முன்வந்துள்ளது.

News May 12, 2024

தோனி ரசிகர்கள் நிம்மதி

image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட் மீதமிருக்கையில் அபார வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டனான தோனியின் பெயர், 8ஆவது வீரராக வரிசையில் இருந்ததால், அவர் பேட் செய்யவில்லை. அத்துடன் இன்றைய போட்டியுடன் தோனி ஓய்வு பெறலாம் என செய்திகள் நிலவியதால், அவரின் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் தோனி ஓய்வு எதையும் அறிவிக்காததால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

error: Content is protected !!