News May 13, 2024

யார் இந்த செல்வராஜ்

image

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சாதிய அடக்குமுறைக்கு எதிராக வெகுண்டெழுந்த செல்வராஜ், 1975இல் இந்திய கம்யூ., கட்சியில் இணைந்தார். சாணிப்பால் சவுக்கடி கொடுமைக்கு எதிராக விவசாய தொழிலாளர்களை திரட்டி போராட்டம் மூலம் வென்று காட்டியவர். ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருந்த அவர், ஏழை எளிய மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தி வெற்றிக் கண்டு, நாகை மாவட்டத்திற்கு ஒளியாக திகழ்ந்தவர்.

News May 13, 2024

Knock-outஆக மாறப் போகும் சிஎஸ்கேvsஆர்சிபி

image

ஐபிஎல் தொடரின் தற்போதைய புள்ளிப் பட்டியல் சுவாரஸ்யமான பல வாய்ப்புகளை முன்னிறுத்துகிறது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெறும் CSK – RCB இடையேயான போட்டி Knock-out போட்டியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுக்கும் 1 போட்டி மட்டுமே மீதமிருக்கும் நிலையில் கடைசிப் போட்டியை வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு போகலாம். அல்லது, இரண்டு அணிகளுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது.

News May 13, 2024

இன்று முதல் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்

image

10ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுநர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு (MLM), வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்புப் பயிற்சி மையம் மாணவர்கள் முன்னதாக பயின்ற பள்ளியிலேயே நடைபெறும்.

News May 13, 2024

ஆந்திராவில் இன்று சட்டமன்றத் தேர்தல்

image

நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSRCP, அவரது சகோதரி ஷர்மிளா தலைமையிலான காங்கிரஸ், தெலுங்கு தேசம் – பாஜக – ஜனசேனா கூட்டணி என மூன்று அணிகள் இந்த தேர்தலில் களமிறங்குகின்றன. மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

News May 13, 2024

இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு

image

நாடாளுமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்றைய வாக்குப்பதிவில் சுமார் 17 கோடியே 47 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.

News May 13, 2024

பொறியியல் விண்ணப்பப் பதிவு விறுவிறு

image

12ஆம் வகுப்பு முடித்தவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி தமிழக பொறியியல் கல்லூரிகளில் இணைவதற்கு இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 6ஆம் தேதி தொடங்கியது.

News May 13, 2024

செல்வம் தரும் ‘பாண்டவதூதப் பெருமாள்’

image

கோயில் நகரமான காஞ்சியில் உள்ளது பெருமை வாய்ந்த திருப்பாடகம் – பாண்டவதூதப் பெருமாள் கோயில். இத்தலத்தில் பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமித் தாயாரோடு அருள்பாலிப்பதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்குச் செல்வ வளம் சேரும் என்கிறார்கள். அத்துடன், பெருமாளின் எட்டுத் திருக்கரங்களிலும் எட்டு ஆயுதங்கள் உள்ளதால், இங்கு வழிபடுவதால் சத்ரு பயம் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

News May 13, 2024

பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்குமா குஜராத்?

image

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் குஜராத் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. குஜராத் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வென்று, நல்ல ரன்-ரேட்டை பெற்று, மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். ஆனால், கொல்கத்தா அணி ஏற்கெனவே பிளே-ஆஃப்-க்கு தகுதி பெற்றுள்ளது.

News May 13, 2024

நாகை எம்பி செல்வராஜ் காலமானார்

image

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே 2ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நள்ளிரவு 1 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News May 13, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ ஆந்திராவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்
➤ பாஜக இந்த தேர்தலில் மக்களால் அப்புறப்படுத்தப்படும் – மம்தா
➤ காங்கிரஸ் வரலாறு காணாத படுதோல்வியை சந்திக்கும் – மோடி
➤ மக்களை மோடி எப்போதும் நினைப்பது இல்லை – ராகுல்
➤ சூர்யா படத்தில் இணைந்த ஜோஜு ஜார்ஜ்
➤ டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி

error: Content is protected !!