News May 17, 2024

தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி

image

தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகவும், தற்போது அதேபோன்ற குற்றச்சாட்டை தன்மீது வைப்பதாகவும் சாடினார்.

News May 17, 2024

விராட் கோலி தவறும் பட்சத்தில் கோப்பை கிடைக்காது!

image

விராட் கோலி வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தத் தவறும் பட்சத்தில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அனுபவம் வாய்ந்த வீரரான கோலி 3ஆவதாக களமிறங்கி, அதிகபட்ச பந்துவீச்சுகளை எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அவரது ஆட்டம் மற்ற அனைவரும் இயல்பாக விளையாடுவதற்கான சூழலை உருவாக்குகிறது என்று கூறினார்.

News May 17, 2024

உள்ளூர் மக்களும் இ-பாஸ் எடுப்பது கட்டாயம்

image

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ‘epass.tngea.org’ என்ற இணையதள முகவரியில் இ-பாஸ் பெறலாம். மே 20 வரை இந்நடைமுறை அமலில் இருக்கும்.

News May 17, 2024

கெஜ்ரிவாலுக்கு புது பிரச்னை (3)

image

கெஜ்ரிவால் கைதுக்கு ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பிக்கள் ஸ்வாதி மாலிவால், சந்தீப் பாதக், என்டி குப்தா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த 3 எம்பிக்களின் மெளனம், ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக கூறும் அரசியல் நோக்கர்கள், முறைகேடு வழக்கு, ஸ்வாதி மாலிவால் விவகாரத்தை கெஜ்ரிவால் எப்படி ஒரே நேரத்தில் எதிர்கொள்ள போகிறார் என்பது தெரியவில்லை என கூறுகின்றனர்.

News May 17, 2024

கெஜ்ரிவாலுக்கு புது பிரச்னை (2)

image

டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவியான ஸ்வாதி மாலிவால், ஆம் ஆத்மி சார்பில் டெல்லி மாநிலங்களவை எம்பியாக உள்ளார். அவர் தன்னை டெல்லி முதல்வர் இல்லத்தில் வைத்து, கெஜ்ரிவாலின் உதவியாளர் காலால் எட்டி உதைத்து தாக்கியதாக குற்றம்சாட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் புகார் மீது காவல்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு அரசியலில் புது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

News May 17, 2024

கெஜ்ரிவாலுக்கு புது பிரச்னை(1)

image

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவால், நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து இடைக்கால ஜாமின் பெற்று 50 நாள்களுக்கு பிறகு வெளியே வந்துள்ளார். இன்னும் அந்த வழக்கு முடியாததால், தேர்தலுக்கு பிறகு மீண்டும் சிறை செல்ல வேண்டியுள்ளது. இதனால், இந்த வழக்கில் அடுத்து என்ன செய்யலாம் என கெஜ்ரிவால் தரப்பு யோசித்து கொண்டிருக்கையில், ஸ்வாதி மாலிவால் மூலம் புதுப் பிரச்னை வெடித்துள்ளது.

News May 17, 2024

இதுதான் என்னுடைய சாதனை

image

2020 ஆம் ஆண்டில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஐபிஎல் தொடரை துபாயில் நடத்தியதை பிசிசிஐ செயலாளராக தாம் செய்த சாதனை என்று ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஒலிம்பிக், இபிஎல், பிரெஞ்ச் ஓபன் போன்ற தொடர்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தள்ளி வைக்கப்பட்டன. ஆனால், அப்போது பிசிசிஐ-யின் பலத்தை நாங்கள் உலகிற்கு காண்பித்தோம் என்றார்.

News May 17, 2024

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை

image

நீட் தேர்வு முடிவுகளை திட்டமிட்டபடி வெளியிட எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணையில், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. மே 5ல் நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்ற நிலையில், ஜூன் 14ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. வினாத்தாள் கசியவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்தாலும் கைது நடவடிக்கை தொடர்கிறது.

News May 17, 2024

தொலைத்தொடர்பு வழியே வளர்ச்சியை ஊக்குவிப்போம்!

image

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) தொடங்கப்பட்டதை குறிக்கும் வகையில், 1969 ஆம் ஆண்டு முதல் மே 17 ஆம் தேதி உலக தொலைத்தொடர்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தகவலை நொடிப் பொழுதில் கொண்டு செல்லவும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. செல்ஃபோன் உள்ளிட்ட அறிவியல் தொலைத்தொடர்பு சாதனங்களின் வழியே நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்போம்.

News May 17, 2024

இணையத்தில் வைரலாகும் நிகிலாவின் பேச்சு

image

பெண் கதாபாத்திரங்களை படத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று ‘கிடாரி’ பட நடிகை நிகிலா விமல் கூறியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், கதைக்கு தேவையானவர்கள் மட்டுமே படத்தில் இடம்பெற வேண்டும் என்றார். அத்துடன், தேவையில்லாமல் பெண்களை சேர்த்தால் கதையின் போக்கு கெட்டுவிடும் எனவும் மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்கள் வென்றதற்கு அதுவே காரணம் எனவும் கூறினார்.

error: Content is protected !!