India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஷாருக் தயாரிக்கும் ‘கிங்’ படத்திற்கு தீம் மியூசிக் கம்போஸிங்கிற்காக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் ஷாருக்கின் மகள் சுஹானா கான் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டது பாஜகவின் சதி என AAP அமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்வாதி முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாகக் கூறிய அவர், பாஜகவின் சதியின் படி அவர் முதல்வர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார் என்றார். மேலும், தன்னை தாக்கியபோது முதல்வர் அங்கு இருந்தார், தனது உடை கிழிக்கப்பட்டது என ஸ்வாதி கூறியது பொய் என இன்று வெளியான வீடியோவில் உறுதியாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
சமீபகாலமாக நாட்டில் நேரடி அந்நிய முதலீடு (FDI), அதிகரித்து வருவதையும், வெளிநாட்டு நிறுவன முதலீடு (FII) குறைந்து வருவதையும் பார்க்கிறோம். அந்நிய முதலீட்டுடன் தொடர்புடையவைதான் என்றாலும், இரண்டுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. FDI என்பது வெளிநாட்டிலிருந்து ஒரு நபர்/நிறுவனம் தொழில் தொடங்குவதைக் குறிக்கும். FII என்பது வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதைக் குறிக்கும்.
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, விழுப்புரம், திருச்சி, கோவை, கடலூர், மதுரை, தேனி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், சேலம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லியத் தாக்குதல் உள்பட பல நினைத்து பார்க்க முடியாத முடிவுகளை பாஜக அரசு எடுத்துள்ளது. மீண்டும் ஆட்சியமைத்தால், பாஜக அரசு இதை சாத்தியமாக்குமா? இதற்காக பாஜகவிடம் திட்டம் ஏதேனும் உள்ளதா? இல்லை கருப்பு பணம் மீட்பு போல இதுவும் தேர்தலுக்கான வெறும் வாக்குறுதி தானா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் நோக்கில் ராணுவ நடவடிக்கை எடுத்தால், அணுஆயுத நாடான பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும். அப்படி தாக்குதல் நடத்தினால் 2 நாடுகளுக்கும் இடையே அணுஆயுத போர் மூளும். அப்படி மூண்டால், உலகம் பேரழிவை சந்திக்கும். இதனால், 2 நாடுகளுக்கு இடையேயான போரில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற 3ஆவது நாடுகளும் தலையிட்டு பிரச்னை பெரிதாகும்.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மூத்தத் தலைவர்கள், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவோடு இணைப்போம் என பிரசாரம் செய்து வருகின்றனர். வங்கதேசம் முன்பு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தபோது, இந்திய ராணுவத்தின் ஆதரவுடன் தனி நாடாக உதயமானது. அப்போது பாகிஸ்தானிடம் அணுஆயுதம் இல்லை. ஆனால், தற்போது பாகிஸ்தானிடம் அணுஆயுதம் உள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே மும்பை அணி நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் களமிறங்குகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். இன்று பும்ரா, டிம் டேவிட், திலக் வர்மா ஆகியோர் விளையாடவில்லை.
வெயிலில் இருந்து வாகன ஓட்டிகளை காக்க சென்னையில் டிராஃபிக் சிக்னல்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்த நிலையில், தற்போது வெயில் தாக்கம் தணிந்து, நேற்றும் இன்றும் மழை பெய்வதால், பசுமை பந்தல்களின் நோக்கம் வீணாகி விட்டதாகவும், இதே பந்தலை தாமதிக்காமல் மார்ச்சில் அமைத்திருந்தால் 2 மாதம் நல்ல பயன் கிடைத்திருக்கும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், AAP மீது டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நீதித்துறை வரலாற்றில், மோசடி வழக்கில் அரசியல் கட்சி மீது குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையாகும். இவ்வழக்கில், ஏற்கெனவே 7 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று 8வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.