India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பைக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி 214/6 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பூரண் 75 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய மும்பை அணி, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. இறுதியில் அந்த அணி 6 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார்.
இன்று (மே 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் இடிக்கப்படலாம் – மோடி
➤ பொய் சொல்வதையே மோடி குறிக்கோளாக வைத்துள்ளார்- பிரியங்கா காந்தி
➤ காங்கிரஸ் கட்சியால் நிலையான ஆட்சியை தர முடியாது – அமித் ஷா
➤ டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்பு
➤ சூர்யா படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே
➤ இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் போட்டியிட வாய்ப்பு
ஐபிஎல்லில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதில் பிரமாண்ட சிக்சர் சாதனையும் அடங்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான தென்னாப்பிரிக்காவின் ஆல்பி மோர்கல், 2008ஆம் ஆண்டில் 125 மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட சிக்சரை விளாசினார். அந்த சாதனை 16 ஆண்டுகளாகியும் இன்னும் முறியடிக்கப்படவில்லை. இதற்கடுத்து, பஞ்சாப் வீரர்கள் பிரவீன் குமார் 124 மீட்டர், கில் கிறிஸ்ட் 122 மீட்டர் தூரம் சிக்சர் அடித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணிக்கு ஏராளமான புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பகலில் முதல் வகுப்பு பெட்டிகளில் பெண் போலீஸ் அல்லது போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்புக்கு வருவதுண்டு. ஆனால் இரவு 10.30 மணிக்கு மேல் இயக்கப்படும் ரயில்களில் போலீஸ் பாதுகாப்பு இருப்பதில்லை. பல புறநகர் ரயில் நிலையங்களிலும் இரவில் இதே நிலைதான். நடவடிக்கை எடுக்குமா ரயில்வே போலீஸ்?
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தால், உடல் மற்றும் மனதளவில் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. அவை என்னென்ன? 1) மூளையை வலுப்படுத்துகிறது 2) நினைவுத் திறனை மேம்படுத்துகிறது 3) மன அழுத்தத்தை குறைக்கிறது 4) நேர்த்தியான வாக்கியங்களை கற்க உதவுகிறது 5) பேச்சுத் திறனை அதிகரிக்க செய்கிறது 6) நிம்மதியான தூக்கத்துக்கு வழிவகுக்கிறது 7) எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிக்கு ஆண்டுதோறும் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் மே 20 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை காரணமாக இத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சந்தேகங்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சூரிய பகவான் இடம்பெயர்ந்துள்ளதால், மேஷம், ரிஷபம், கடகம், சிம்ம ராசியினர் அதிர்ஷ்டம் பெற உள்ளனர். அடுத்த ஒரு மாத காலம் சிறப்பாக இருக்கும், வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
இலவசப் பேருந்து பயணம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணலில் பிரதமர் மோடி, மகளிர் இலவச பேருந்து பயணம் காரணமாக மெட்ரோ ரயிலில் 50% பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறினார். இந்நிலையில், பிரதமரும், அமைச்சர்களும் இலவச விமானப் பயணத்தைப் மேற்கொள்ளலாம் என்றால், பெண்களும் இலவசப் பேருந்து பயணத்தைப் பெறலாம் என கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்
தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.