India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் உடன் ஐடிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தை இணைக்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். முன்னதாக, இரு வங்கிகளையும் இணைக்க கடந்த டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருந்தது. இணைப்புக்கு பிறகு, 100 ஐடிஎஃப்சி லிமிடெட் பங்குகளுக்கு இணையாக 155 ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் பங்குகள் பங்குதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், இரு நிறுவன பங்குகளும் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 2 பலம் வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். போட்டிக்கு நடுவே மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஓவர்கள் குறைக்கப்படுமா? போட்டி நடக்குமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக கடலோர பகுதிகளில் 55-65 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதி, கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு-மாலத்தீவு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடலில் 55 கி.மீ. வேகத்திலும், 20, 21,22இல் 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி வீசக்கூடும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதனிடையே, தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் நாட்டில் இதுவரை ₹849.15 கோடி ரொக்கம், மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்கள் என ₹8,889 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும், ₹69.59 கோடி ரொக்கம் உட்பட ₹543.72 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரேபரேலிக்கு பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி காரில் பயணித்த போது, தங்கள் குழந்தை பருவத்தை இருவரும் நினைவுக் கூர்ந்தனர். இது குறித்த வீடியோவை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல், பாட்டியின் புத்திசாலித்தனம், அப்பாவுக்குப் பிடித்த ஜிலேபி, பிரியங்கா செய்த கேக்குகள் எல்லாம் நினைவுக்கு வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ரேபரேலியில் முதல்முறையாக ராகுல் காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
நாசிக்கில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், பாகிஸ்தானுடன் இந்தியா மீண்டும் இருதரப்பு கிரிக்கெட் போட்டியில் விளையாடுமா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தாத வரை பாகிஸ்தானுடன் இந்தியா இருதரப்பு கிரிக்கெட்டில் பங்கேற்காது என்றார். இதேபோல், ஐபிஎல் தொடரிலும் பாகிஸ்தான் வீரர்கள் சேர்த்து கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.
வேளாண் பயிர், உணவுப் பொருள்களில் அதிக அளவு பூச்சிக் கொல்லி மருந்து, உரங்கள் பயன்படுத்தப்படுவதால், மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து பதிலளிக்கக்கோரி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், சுகாதார அமைச்சகம், உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரபிரதேசம் உட்பட 49 தொகுதிகளில் மாலை 6 மணியுடன் 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போன்ற பிரபலங்களின் வெற்றி வாய்ப்பு இந்த தேர்தலில் தீர்மானிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. இதில், 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் தீபாவளி அன்று வெளியாகுமென இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம், வரலாற்று பின்னணியைக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதுவே, சூர்யாவின் கரியரில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உலகளவில் நடைபெறும் LGBTQIA+ பிரைட் நிகழ்வுகளில் தீவிரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. LGBTQIA+ மக்கள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பிரம்மாண்ட பேரணிகளை நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.