India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
யூடியூப் சேனல்கள் தவறுதலாக திரித்து வெளியிடுவதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார். அவரது நேர்காணலொன்று இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர், இனிமேல் தனது யூடியூப் சேனலில் மட்டும் பேச உள்ளதாகவும், அதில் சினிமா, தத்துவம் சார்ந்த வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் கூறினார். மேலும், மற்ற யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு லேசாக சாரல் வீசிய நிலையிலும், டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. 3 ஓவர்கள் முடிந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியதால், நடுவர்கள் போட்டியை நிறுத்த உத்தரவிட்டனர். மழை நின்றதும் போட்டி தொடங்கப்படும் மீண்டும் என்றும், இல்லையென்றால் ஓவர்கள் குறைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் புதிய படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. பாஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஒரு சில மாதங்களில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
புகழ்பெற்ற வங்கியாளரும், ICICI வங்கியின் முன்னாள் தலைவருமான நாராயணன் வகுல் (88) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார். இந்தியாவின் 2வது தனியார் துறை வங்கியாக ICICI வளர்ச்சி பெற இவரே முக்கிய காரணமாக இருந்தார். மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட நிதித்துறை சீர்திருத்தங்களில், நாராயணனும் முக்கிய பங்கு வகித்ததாக காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நினைவுகூர்ந்துள்ளார்.
பிரிட்டனில் இருந்து 85 ஆண்டுகளாக Reader Digest பத்திரிகை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெறும் குடும்பத்தினரை கவரும் செய்திகள், துணுக்குகள், உடல்நலக் குறிப்புகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்ததால் உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில், தனது வெளியீட்டை அந்நிறுவனம் மே மாதத்துடன் நிறுத்தியுள்ளது. நிதி நெருக்கடியால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக இதுவரை 10 பேர் சதமடித்துள்ளனர். 2013இல் புனே அணிக்கு எதிராக 30 பந்துகளில் ஆர்சிபி வீரர் கெய்ல் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். இதற்கடுத்து யூசுப் பதான் (37 பந்துகள்), மில்லர் (38), டிராவிஸ் ஹெட் (39), வில் ஜேக்ஸ் (41), கில் கிறிஸ்ட் (42), டி வில்லியர்ஸ் (43), வார்னர் (43), ஜெயசூர்யா (45), அகர்வால் (45), முரளி விஜய் (46) ஆகியோர் அதிவேகமாக சதமடித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரோ, பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் அப்பகுதியை கேட்க வேண்டாம் என கூறுகிறார், ஆனால், பாகிஸ்தானிடம் உள்ள அணுகுண்டை கண்டு பாஜக அஞ்சாது, அப்பகுதியை மீட்போம் என்றார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேர்தல் விதிமீறல் உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்க சி.விஜில் என்ற செயலியை EC ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 4.24 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 4,23,908 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், தற்போது 409 புகார்கள் மட்டுமே விசாரணையில் உள்ளதாகவும், 89% புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டதாகவும் EC தெரிவித்துள்ளது.
டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதாகவும், இறுதிப் போட்டியில் சரியாக விளையாடாததால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றும், டி20 உலக கோப்பை இந்திய அணி, பார்மில் உள்ள வீரர்கள், அனுபவ வீரர்களை கொண்ட நல்ல கலவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.