News May 18, 2024

ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா

image

உலகில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததால், ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு மக்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 5 முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 25,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் முகக்கவசம் அணியும்படி மக்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

News May 18, 2024

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருவள்ளூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

News May 18, 2024

2025 ஜனவரியில் ‘இந்தியன் 3’ வெளியீடு

image

‘இந்தியன் 3’ திரைப்படம், 2025 ஜனவரியில் வெளியாகும் என இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஷங்கர், “இது பெரிய கதை என்பதால் 3 மணி நேரத்திற்குள் படத்தின் நீளத்தை குறைக்க முடியவில்லை. அதனால் தான் 2 பாகங்களாக வெளியிட முடிவெடுத்தோம்” எனத் தெரிவித்தார். இதுகுறித்து கமல் பேசுகையில், “இந்தியன் 3 படத்தின் கதையை கேட்டுத்தான் 2ஆம் பாகத்திற்கே ஒப்புக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.

News May 18, 2024

சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்கு

image

CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டியில், சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற CSK அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய RCB அணி, தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. டு பிளசி- 54, கோலி- 47, படிதார்- 41 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில், RCB அணி 218 ரன்கள் எடுத்தது. சேஸ் செய்யுமா CSK?

News May 18, 2024

முத்தக் காட்சி குறித்து நடிகை தமன்னா கருத்து

image

முத்தக் காட்சிகளில் நடிப்பது குறித்து, நடிகை தமன்னா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், முத்தக் காட்சிகளில் நடிக்காமல் இருந்த அவர், ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ படத்தில் முதல்முறையாக அதற்கு ஒப்புக்கொண்டதாகவும், அந்த காட்சிகளை படமாக்கும் போது பெண்களை விட ஆண்களே அதிகம் அசௌகரியமாக உணர்வார்கள் என்றும் கூறினார். மேலும், நடிகைகள் மனம் உடைந்து போய்விட கூடாது என நடிகர்கள் யோசிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

News May 18, 2024

சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்

image

பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், காலம் வரும் வரை காத்திருப்போம் எனவும் கூறப்பட்டுள்ளது.

News May 18, 2024

இந்தியாவின் முதல் அணுஆயுத சோதனையும், பின்னணியும் (3)

image

1974இல் சோதனை நடத்தியபோதும் அணுஆயுதங்களை இந்தியா உருவாக்கவில்லை. 2ஆவது சோதனைக்கு பிறகே உருவாக்கியது. இந்தியா முதல் அணுஆயுதத்தை சோதனை நடத்தி, இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன. ஹிரோஷிமா பேரழிவு தாக்குதல், உலகிற்கு அணுஆயுதம் தேவையில்லை என்பதை உணர்த்தும் போதிலும், சீனாவிடம் அணுஆயுதம் இருக்கையில், இந்தியாவும் வைத்திருப்பது பாதுகாப்புக்கு வலுச் சேர்க்கும்.

News May 18, 2024

இந்தியாவின் முதல் அணுஆயுத சோதனையும், பின்னணியும் (2)

image

1962ஆம் ஆண்டு இந்தியா, சீனா இடையே போர் நடந்தது. இதில் சில நிலப்பகுதிகளை சீனாவிடம் இந்தியா இழந்தது. இதையடுத்து பாகிஸ்தானுடன் 1965, 1971ஆம் ஆண்டுகளில் 2 முறை இந்தியா போர்களில் ஈடுபட்டது. இதனால் 2 அண்டை நாடுகளுடன் இந்தியாவுக்கு பகைமை நிலவியது. எனவே, எதிர்காலத்தில் இருநாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் சூழ்நிலை நிலவியதால், அந்த அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா 1974இல் அணுஆயுத சோதனையை நடத்தியது.

News May 18, 2024

இந்தியாவின் முதல் அணுஆயுத சோதனையும், பின்னணியும் (1)

image

ராஜஸ்தானின் பொக்ரானில் 1974 மே 18ஆம் தேதி இந்தியா முதல்முறையாக அணுஆயுத சோதனையை நடத்தியது. அப்போது பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தார். அமெரிக்கா, சோவியத் யூனியன் இடையே பனிப்போர் நிலவியதால், இருநாடுகளும் அணுஆயுத குவிப்பில் ஈடுபட்டிருந்தன. சீனாவும் 1964இல் அணு ஆயுத சோதனை நடத்தியிருந்தது. இதையடுத்து 1974இல் இந்தியா முதல்முறையாக அணுஆயுத சோதனையை நடத்தியது.

News May 18, 2024

நான் சொல்வதைதான் மோடி பேசுகிறார்: ராகுல் காந்தி

image

தான் பேசுவதைத்தான் பிரதமர் மோடி கூட்டத்தில் திரும்ப பேசுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தொழிலதிபர்களான அதானி, அம்பானி குறித்து தாம் பேசியதாகவும், இதையடுத்து மோடியும் அவர்களை பற்றி பேசியதாகவும் குறிப்பிட்டார். மோடி ஏதேனும் பேச வேண்டுமென நீங்கள் விரும்பினால், அதை தெரிவிக்கலாம், அதை கூட்டத்தில் தாம் கூறுவதாக ராகுல் தெரிவித்தார்.

error: Content is protected !!