News May 19, 2024

படப்பிடிப்பு முடிந்தும் சிலம்பத்தை விடாத மாளவிகா

image

பா. இரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு பல ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால், சிலம்பம் சுற்றக் கற்றுக் கொண்டார். படப்பிடிப்பு முடிந்த பின்னரும் சிலம்பம் சுற்றும் பயிற்சியை கைவிடாத அவர், தனது பக்கத்து வீட்டுத் தோழியுடன் மொட்டை மாடியில் சிலம்பம் சுற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News May 19, 2024

துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எஃப் வீரர் மரணம்

image

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இரவுப் பணி முடிந்து புறப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ரவி கிரண் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர். கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பிரேதபரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 19, 2024

இந்த வார சண்டே கிச்சன் டிப்ஸ்

image

*குலோப் ஜாமூனை ஆற வைத்த சர்க்கரை பாகில் போட்டு ஊற வைத்தால் உடைந்து போகாது. *முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம். *கோதுமை மாவு போட்டு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் பிரியாணி இலைகளை சேர்த்தால் வண்டு வராது. *ஆப்பத்திற்கு மாவு கலக்கும் போது 2 மஞ்சள் வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி சேர்த்து ஆப்பம் வார்த்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.

News May 19, 2024

IPL தொடரில் அடுத்தது என்ன?

image

IPL தொடரில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் KKR அணி, இரண்டாம் இடம் பிடிக்கப் போகும் அணியை மே 21ஆம் தேதி Qualifier 1 போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கும் RCB அணி, 3ஆவது இடம் பிடிக்கப் போகும் அணியை மே 22ஆம் தேதி Eliminator போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது. பின்னர், மே 24ஆம் தேதி Qualifier 1இல் தோற்ற அணியை Eliminatorஇல் வென்ற அணி எதிர்கொள்ளும்.

News May 19, 2024

இளைஞர்களின் ரிங்டோனாக ஒலிக்கும் சித் ஸ்ரீராம்

image

கேட்போரை மெய் மறக்கச் செய்யும் வசீகர குரலுக்கு சொந்தக்காரரான சித் ஸ்ரீராம் இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடல் படத்தின் “அடியே…” பாடலை பாடி கவனம் ஈர்த்த இவர், “என்னோடு நீ இருந்தால்…” பாடல் மூலம் ரசிகர்களின் மனதைத் தொட்டார். “தள்ளிப்போகாதே…” பாடலால் பட்டித் தொட்டி எங்கும் பரவிய அவரது குரல், “மறுவார்த்தை பேசாதே…” போன்ற பாடல்களாக இளைஞர்களின் ரிங்டோனாக ஒலித்து வருகிறது.

News May 19, 2024

பாஜக அலுவலகம் செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்

image

பாஜக தலைமையகத்தில் ஆம் ஆத்மி இன்று போராட்டம் அறிவித்துள்ளதால், டெல்லி போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கைதானதில் இருந்து டெல்லி அரசியல் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடையுங்கள் எனவும், தாங்களே பாஜக அலுவலகம் வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

News May 19, 2024

இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’

image

டெல்லி போன்ற நகரங்களில் Cuddle Therapy என்று சொல்லப்படும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ பிரபலமாகி வருகிறது. 20 முதல் 25 வயது கொண்ட இளம் பெண்கள் இந்த முயற்சியை முன்னெடுக்கின்றனர். வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை மனம் விட்டு பேசவும், கட்டிப்பிடித்து மன ஆறுதல் அடையவும் இந்த தெரபிஸ்ட்கள் உதவுகின்றனர். இதற்காக, ஒரு மணி நேரத்திற்கு இவர்கள் சுமார் ₹20,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

News May 19, 2024

தமிழகத்தில் 3 நாள்களுக்கு ‘ரெட் அலர்ட்’

image

அதி கனமழை காரணமாக தமிழ்நாட்டுக்கு இன்று முதல் 21ஆம் தேதி வரை ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இன்று (19.05.2024) நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (20.05.2024) மற்றும் நாளை மறுநாள் (21.05.2024) ஆகிய நாள்களில் குமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

News May 19, 2024

ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவு

image

17ஆவது IPL கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடைகிறது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69வது லீக் ஆட்டத்தில் SRH, PBKS அணிகள் மோதுகின்றன. கவுகாத்தி பர்சபரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் கடைசி லீக் ஆட்டத்தில் RR, KKR அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளி பட்டியலில் KKR முதலிடத்தை தக்க வைத்துள்ளதால் 2, 3ஆவது இடங்களுக்கு போட்டி நிலவுகிறது.

News May 19, 2024

நுங்கில் இத்தனை மருத்துவ பலன்களா?

image

வெயில் காலங்களில் அதிகளவில் கிடைக்கும் நுங்கு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பனை நுங்கிற்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் உண்டு. நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியைத் தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. அம்மை நோயைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

error: Content is protected !!