India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சரும், பரத்பூர் அரச குடும்ப உறுப்பினருமான விஸ்வேந்திர சிங், மனைவியும் முன்னாள் எம்பியுமான திவ்யா சிங், மகன் அனிருத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில், அரண்மனை உள்ளிட்ட சொத்துக்களை மனைவி அபகரித்து கொண்டு விட்டதாகவும், சாப்பாடு தரவில்லை எனவும், அடித்து சித்ரவதை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை திவ்யா சிங்கும், அனிருத்தும் மறுத்துள்ளனர்.

பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணி புதிய சாதனை படைத்துள்ளது. அபிஷேக் ஷர்மா, க்ளாஸனின் அதிரடியான ஆட்டத்தால் 14 சிக்சர்களை பதிவு செய்த ஹைதராபாத் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 160 சிக்சர்களை விளாசியுள்ளது. இதன் மூலம், பெங்களூரு அணியைத் (157 சிக்சர்கள்) தொடர்ந்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 150 சிக்சர்களை அடித்த 2ஆவது அணி என்ற புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடி தீர்க்கப்பட்ட படம் ‘படையப்பா’. இதில், ரஜினியின் நடிப்பு, ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. தற்போது ரீரிலிஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், இப்படத்தை ரீரிலிஸ் செய்வது குறித்து ரஜினியுடன் தயாரிப்பாளர் தேனப்பன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

காங்கிரஸ் கட்சிக்குள் அவுரங்கசீப் ஆவி புகுந்திருப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். அவுரங்கசீப் தனது சகோதரர், தந்தையை கொலை செய்ததாகவும், இந்து கோயில்களை இடித்ததாகவும், அவரின் ஆவிதான் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளுக்குள் புகுந்துள்ளதாகவும், இதனால் தான் குடும்ப வரி விதித்து, இந்துக்களின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு வழங்குவோம் என அக்கட்சிகள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க முடியாது என்பது பாஜகவுக்கே தெரியும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சாடியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஆம் ஆத்மி தலைவர்களை தேடித் தேடி பாஜக கைது செய்வதாக கூறினார். மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தால், அக்கட்சியால் யாரையும் கைது செய்ய முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.

இபிஎஸ் தலைமையின்கீழ் அதிமுக வலுவாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வார பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அதிமுக பிளவுபட போவதாக சட்ட அமைச்சர் ரகுபதி தனது கற்பனை திறனை வெளிபடுத்தியுள்ளதாகவும், காமாலைக்காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும், அதிமுகவில் பாஜகவோ, வேறு யாருமோ விரிசலை ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில், ₹1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும், ₹5,505 கோடிக்கு கடன் வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓய்வூதியதாரர்களுக்கும் வீடு உட்பட அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வரும் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அனிருத் இசையமைத்துள்ள படத்தின் முதல் பாடல், வரும் மே 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளது. புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

வானிலை மையத்தால் பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு என 4 வகை எச்சரிக்கை விடப்படுகிறது. மழை பொழிவின் அளவு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தவே இதனை வானிலை மையம் செய்கிறது. இதில் பச்சை நிற எச்சரிக்கை எனில், மோசமான வானிலைக்கு வாய்ப்பு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை என்று பொருள்படும். மஞ்சள் நிற எச்சரிக்கை எனில், குறிப்பிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அர்த்தம்.

ஆரஞ்ச் நிற எச்சரிக்கை எனில், மிக கனமழை பெய்யக்கூடும் என்று பொருள்படும். சிவப்பு நிற எச்சரிக்கை எனில், அதி கனமழை பெய்யக்கூடும் என்று அர்த்தமாகும். பொதுவாக ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிற எச்சரிக்கையின்போது எதிர்பார்ப்பதை விட மிக அதிகளவு மழை பல நேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளது. ஆதலால் வானிலை மையம் இத்தகைய எச்சரிக்கை விடுக்கையில், அதை புறக்கணிக்காமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
Sorry, no posts matched your criteria.