India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கியில் நகைக் கடன் வைத்திருப்போர் அக்கடனை அடைக்க முடியாதபட்சத்தில், நகைகள் ஏலத்திற்கு செல்லாமல் இருக்க அதனை புதுப்பிப்பது வழக்கம். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் பெற்ற நகைக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுவதையும், கடன் முடிக்கப்படுவதையும் உறுதிசெய்யுமாறு வங்கிகள் தங்கள் கிளைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. அத்துடன், கடனை புதுப்பிக்கவோ அல்லது மேம்படுத்தப்படவோ அனுமதிக்க கூடாது எனவும் கூறியுள்ளன.
KKR-RR இடையேயான கடைசி லீக் போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நிற்கும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும். மழை நிற்கவில்லை என்றால், போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். அப்படியானால், SRH, RR அணிகள் 17 புள்ளிகளுடன் சமனில் இருக்கும். ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில், SRH 2ஆவது இடத்தையும், RR 3ஆவது இடத்தையும் பிடிக்கும்.
தமிழ் நடிகைகள் பலரும் இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், கீர்த்தி சுரேஷும் தற்போது இணைந்துள்ளார். வருண் தவான் நடிக்கும் “பேபி ஜான்” படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதில் முத்தக்காட்சி இருப்பதால், சம்மதம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்தபிறகே ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் LKG முதல் 8ஆம் வகுப்பு வரையிலான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இத்திட்டத்தின் கீழ் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும். தமிழகத்தில் 8,000க்கும் அதிகமான பள்ளிகளில் 1,10,000 இடங்கள் உள்ளன. இதில் சேர நாளைக்குள் (மே 20), rte.tnschools.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மே 27இல் தகுதியானவர் விவரம் அறிவிக்கப்படும்.
‘சித்தார்த் 40’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளதாக இயக்குநர் ஸ்ரீகணேஷ் தெரிவித்துள்ளார். சித்தார்த்துடன் இணைந்து படம் பண்ண வேண்டுமென்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், ‘சித்தா’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்த போது, இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து முடிவு செய்தோம் என்றும் கூறினார். மேலும், கதை மீது சித்தார்த்துக்கு நிறைய நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, நாளை மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. ரூபே (RuPay) கார்டு வைத்திருப்பவர்கள், இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை நாளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் நாளை மறுநாள் (மே 21) வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் ஆப், பேடிஎம் இன்சைடர் மற்றும் www.insider.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, தேமுதிகவுக்கு அதிக கடன் இருந்ததாகவும், அதை எப்படி அடைப்பது எனத் தெரியாமல் பிரேமலதா இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக போட்டியிட்ட நிலையில், அக்கட்சிக்கு கிடைத்த நிதியை வைத்து, ஒட்டுமொத்த கடனையும் அடைத்து விட்டதாகவும், இதனால் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்குவங்க பாஜக எம்.பி குனார் ஹெம்ப்ராம், மக்களவைத் தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். இந்நிலையில், அந்த நம்பிக்கை பொய்த்து போனதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
வீர் சவார்க்கரின் 5 பெருமை சொல்ல முடியுமா என INDIA கூட்டணிக்கு மோடி சவால் விட்டிருந்தார். இதற்கு நேச்சுரல் சலூன்கள் சிஇஓ குமாரவேல், சவார்க்கர் கோழை, காந்தி கொலைக்கு திட்டமிட்டவர், கருணை மனு நிபுணர், கோட்சேவை மூளை சலவை செய்து காந்தியை கொன்றவர், இந்துத்துவா மனநோயாளி என பதிவிட்டார். இதனால், சாவர்க்கர் ஆதரவாளர்கள் நேச்சுரல் சலூன்களை புறக்கணிக்கும்படி Xஇல் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
17 ஐபிஎல் தொடர்களில் 10 வீரர்கள் அதிக ரன்களை குவித்துள்ளனர். அவர்களில் கோலி 251 போட்டிகளில் விளையாடி 7971 ரன்கள் குவித்து முதலாவதாக உள்ளார். இதில் 8 சதம், 55 அரைசதம் அடங்கும். தவான் (6769), ரோஹித் சர்மா (6628), வார்னர் (6565), சுரேஷ் ரெய்னா (5528), தோனி (5243), டி வில்லியர்ஸ் (5162), கிறிஸ் கெய்ல் (4965), உத்தப்பா (4952), தினேஷ் கார்த்திக் (4831) ஆகியோர் 2- 10 வரையிலான இடங்களில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.