News May 20, 2024

குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவது சரியா?

image

சென்னையில், வீட்டின் கூரை மீது தவறி விழுந்த குழந்தையின் தாயார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். குழந்தையை சரியாகக் கவனிக்கவில்லை என்ற விமர்சனம் தாங்காமல் மனமுடைந்து அவர் தூக்குப் போட்டுக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெரியாமல் நடைபெற்ற தவறுக்கு இப்படி ஒருவரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி சாகத் தூண்டுவது சரியா? புறணி பேசுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

News May 20, 2024

இன்று களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்

image

மக்களவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி களம் காண்கிறார். அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, லக்னோவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை வடக்கில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, பிஹாரின் ஹாஜிபூரில் LJP சார்பில் சிராக் பாஸ்வான் களம் காண்கின்றனர்.

News May 20, 2024

2ஆவது இடத்திற்கு முன்னேறியது SRH

image

நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி போட்டிக்கு முந்தைய போட்டியில் PBKS அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் இருந்த SRH 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல், கடைசி போட்டி மழையால் ரத்தானதால் KKR 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும், RR 17 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், RCB 4ஆவது இடத்திலும் உள்ளன. இதனால், மே 22ஆம் தேதி நடைபெறவுள்ள Eliminator போட்டியில் KKR – SRH அணிகள் மோதுகின்றன.

News May 20, 2024

புண்ணிய நதிகளில் நீராடிய பலனை தரும் சோம பிரதோஷம்

image

சோம பிரதோஷம் அன்று மனமுருகி பக்தர்கள் வேண்டுவதை ஆதிசிவன் அருளுவான் என்பது
சைவக்குறவர்களின் வாக்கு. அத்தகைய மகிமை வாய்ந்த பிரதோஷ நாளான இன்று நஞ்சுண்ட இறைவனுக்கு விரதமிருந்து, கோயிலுக்குச் சென்று நந்தித் தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்து, அவரின் கொம்புகளின் வழியாகவே சிவனை தரிசித்து, தேவாரம் பாடி, நெய் விளக்கேற்றி வணங்கினால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

News May 20, 2024

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு

image

நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 49 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 695 பேர் போட்டியிடுகின்றனர். இதில், சுமார் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்கும் 4 கட்ட வாக்குப்பதிவில் 66.95% வாக்குப்பதிவு மட்டுமே நடைபெற்றிருப்பதால் அதனை அதிகரிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

News May 20, 2024

வீடு கட்ட ‘பிளானிங் அப்ரூவல்’ வாங்கத் தேவையில்லையா?

image

தமிழகத்தில் வீடு கட்டுவதற்கான ‘பிளானிங் அப்ரூவல்’ வாங்க தேவையில்லை என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது உண்மைதான். இச்சலுகை 2,500 சதுர அடி வரையிலான அடிமனையில், 3,500 சதுர அடி வரை கட்டியெழுப்பப்படும் தரைதளம் அல்லது G+1 முதல் மாடி இருக்கக்கூடிய கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இது தொடர்பாக அரசு இதுவரை எந்த அறிவிக்கையையும் வெளியிடவில்லை.

News May 20, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க மோடி ஓய்வுபெற வேண்டும் – ராகுல் காந்தி
*கெஜ்ரிவாலிடம் இருந்து டெல்லியை மீட்க வேண்டும் – அண்ணாமலை
*மியான்மரின் மேற்கு மாகாணத்தின் ஒரு பகுதியை அராக்கன் படை கைப்பற்றியது.
*இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்வெரேவ் வென்றார்.
*நடப்பாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் கணினி சந்தையில், 30.7 லட்சம் கணினி சாதனங்கள் விற்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

சென்னையில் இரவு மழை

image

தலைநகர் சென்னையில் இரவு முழுவதும் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தென் மாநிலங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்து வருகிறது. ஆனாலும், சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு பெய்த மழை பூமியை குளிர வைத்துள்ளது. இதனால், சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News May 20, 2024

பீத்தோவனின் பொன்மொழிகள்

image

✍இசை இல்லாத வாழ்க்கை ஒரு பாலைவனத்தின் வழியாக பயணம் செய்வதைப் போன்றது. ✍இசை என்பது மொழியை மீறிய ஒரு கலை வடிவமாகும். ✍மிகவும் இறுக்கமாக மூடிய இதயத்தையும் திறக்கும் ஒரு மந்திரச் சாவியைப் போல இசை செயல்படுகிறது. ✍இசை என்பது உண்மையில் ஆன்மீகத்திற்கும் சிற்றின்ப வாழ்க்கைக்கும் இடையிலான இடைநடுவராகும். ✍வார்த்தைகள் பேசப்படுவதற்கு முன்பே இசை கண்டறியப்பட்டது. ✍நவீன இசை போதைப்பொருள் போலவே ஆபத்தானது.

News May 20, 2024

காணாமல் போன தமிழர்களின் கதி என்ன?

image

இலங்கையில் 1983 – 2009 வரை காணாமல் போன 1.40 லட்சம் தமிழர்களின் நிலை குறித்து ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், மாயமானவர்களின் எண்ணிக்கையை அறிவிப்பதுடன், இதற்கு சிங்கள ராணுவம் & பாதுகாப்பு படையினர்தான் காரணம் என்பதை ஏற்றுக்கொண்டு, இலங்கை அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். மனித உரிமை செயல்பாட்டாளர்கள் காணாமல் ஆக்கப்படுதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!