India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “பள்ளிகளிலும், தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் வன்கொடுமைகள் தொடர்வது மிகுந்த கவலையை அளிக்கிறது. சங்கம்விடுதி ஊராட்சி நீர்த்தொட்டியில் சாணத்தைக் கலந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் அருகே மதுபோதையில் பெண் VAO வயிற்றில் எட்டி உதைத்த திமுக மாவட்ட கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். ஆ.கூடலூர் VAO சாந்தி, 19ஆம் தேதி வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளுக்கு உணவு வழங்கியபோது, கவுன்சிலர் ராஜீவ்காந்தி, அவரை கன்னத்தில் அறைந்து திட்டியுள்ளார். பிறகு மது அருந்திவிட்டு வந்து வயிற்றில் உதைத்துள்ளார். புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த ராஜீவ்காந்தியை போலீசார் கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், ஓய்வெடுக்கும் வகையில் ஒருவார பயணமாக ஏப். 29ஆம் தேதி மாலத்தீவு செல்லவுள்ளார். குடும்பத்தினருடன் செல்லும் அவர், அரசுப் பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46°C வரை வெப்ப அளவு பதிவாகக்கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவித்தார். மேலும், மே 5 முதல் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்பதைத் தடுக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக, ஆன்லைனில் விற்கப்படும் IPL டிக்கெட்டுகள், சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்து விடும். அதனை வாங்க முடிந்தவர்கள், 10 மடங்கு அதிக விலைக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் சாதாரண ரசிகர்களால் போட்டியை காண முடியாத சூழல் உருவாகிறது என்பதே பலருடைய குற்றச்சாட்டு.
மேற்கு வங்கத்தில் லஞ்சம் கொடுக்காமல் அரசு வேலைகள் எதுவும் நடக்காது என்று மோடி குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு மால்டாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், விவசாயிகளும் அதிலிருந்து தப்பவில்லை என்றும் விமர்சித்தார். இளைஞர்களின் எதிர்காலத்தோடு திரிணாமுல் விளையாடுவதாகவும், அக்கட்சியால் 26,000 குடும்பங்கள் வேலையை இழந்து விட்டதாகவும் அவர் புகார் கூறினார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிட்டது குறித்து மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் கூறியபோது, கொள்கை காரணங்களுக்காக I.N.D.I.A. கூட்டணியுடன் பிஎஸ்பி கூட்டணி வைக்கவில்லை என்றார். மாயாவதியே பிரதமர் வேட்பாளர், அவரை பிரதமராக காண விரும்புகிறோம் என்றும் அவர் கூறினார்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (NEET-UG) தேர்வு, வரும் மே மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில் உள்ள புகைப்படங்களை இன்று மாற்றிக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இரவு 11.59 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து கொள்ளவும்.
கோடையில் சீரான மின் விநியோகம் வழங்குவது, மின் தடை தொடர்பாக மின்சாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாநிலத்தில் போதுமான மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், விநியோகத்தில் ஏற்படும் சிக்கலால் மின் தடை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இரவு 10 மணிக்கு மேல் அதிகளவு மின்சாதனங்கள் பயன்படுத்தப்படுவதால் மின்மாற்றிகளில் பிரச்னை ஏற்படுவதாகவும் கூறினர்.
திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களை, நடிகர் விஷால் காட்டமாக விமர்சித்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், தனது ‘ரத்னம்’ படத்தை வெளியிட முடியாமல் இருப்பது உங்கள் அனைவருக்கும் வெட்கக்கேடு என்றும், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.