India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய வங்கித் துறையின் நிகர லாபம் ₹3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கையால் நஷ்டத்தில் இருந்த வங்கித் துறை, தற்போது முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதன் மூலம், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைப்பதை மேம்படுத்த உதவும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பும் பல பிரபலங்கள், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 1987-லெபனான் பிரதமர் ரச்சிட் கராமி, 1976-மடகாஸ்கர் பிரதமர் ஜோயல், 2004-நடிகை சௌந்தர்யா, 2009-ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, 2011-அருணாச்சல பிரதேச முதல்வர் போர்ஜி காண்டு, 2021-இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக ஆட்சியில் விவசாய பட்ஜெட் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் பரப்புரை மேற்கொண்ட அவர், மோடியால் மட்டுமே நாட்டை முழு வளர்ச்சியடைந்த, தன்னிறைவு பெற்றதாக மாற்ற முடியும் என்றார். மேலும், காங்., ஆட்சியில் விவசாய பட்ஜெட் ₹22,000 கோடியாக இருந்ததாகவும், ஆனால் 10 ஆண்டுகளில் தங்கள் ஆட்சியில் ₹1,25,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவதால், பருத்தி விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நடப்பாண்டில் விளைச்சல் நல்லபடியாக இருக்கும் நிலையில், மழை காரணமாக பருத்தியின் தேவை குறைந்துள்ளது. இதனால் ₹65க்கு விற்பனையான ஒருகிலோ பருத்தி தற்போது, ₹58ஆக குறைந்துள்ளது. வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. சிஎஸ்கே அணி இந்தப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் அவ்வணி ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கிக் குவித்திருந்தனர். ஆனால், சிஎஸ்கே லீக் சுற்றிலேயே வெளியேறியதால், குவாலிஃபையர் 2 போட்டியின் டிக்கெட்டுகளை சிஎஸ்கே ரசிகர்கள் ப்ளாக் மார்கெட்டில் விற்க முயல்கின்றனர். ஆனால், அவை விலை போகாததால் டிக்கெட் வாங்கியவர்கள் பரிதவிக்கின்றனர்.
நேபாள அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசண்டா வெற்றி பெற்றுள்ளார். நேபாள கம்யூ. அரசில் அங்கம் வகித்த ஜனதா சமாஜ்வாதி கட்சி தனது ஆதரவைத் திரும்பப் பெற்றது. இந்நிலையில், மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் 158 உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். எதிர்க்கட்சியான நேபாள காங்., வாக்கெடுப்பை புறக்கணித்ததால், பிரசண்டா அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் தப்பியது.
தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ₹24,500 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. 3 நீர்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய சுற்றுச்சூழல் அனுமதியை அந்நிறுவனம் கோரியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, தோராயமாக 36.73% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பிஹார் – 34.62%, ஜம்மு காஷ்மீர் – 34.79%, ஜார்கண்ட் – 41.89%, லடாக் – 52.02%, மகாராஷ்டிரா – 27.78%, ஒடிஷா – 35.31%, மேற்கு வங்கம் – 48.41%, உ.பி. – 39.55% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
சீனா, அமெரிக்கா இடையே பனிப்போர் நிலவுகிறது. அண்மையில் சீனாவின் பல்வேறு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், போயிங் விமான நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு அந்நாடு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யவும், அந்நிறுவன அதிகாரிகள் சீனாவுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.