India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீட்டுக்கு மின் கட்டணமாக ₹8.75 லட்சம் செலுத்தக்கோரி வந்த குறுஞ்செய்தியை கண்டு விவசாயி ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னட்டியை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், ₹100 மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்தநிலையில் ₹8.75 லட்சம் செலுத்தக்கோரி மின்வாரியத்திலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுதொடர்பாக மின்வாரியத்திடம் அவர் புகார் அளித்த நிலையில், பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், வெளிமாநிலங்களுக்கு சென்று பாஜகவினரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் செய்கிறார். தேர்தல் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பல மாவட்ட நிர்வாகிகள் பதுக்கி விட்டதாகவும், இதேபோல் தேர்தலில் பல இடங்களில் வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளிக்க விரும்பாமல்தான், அண்ணாமலை சுற்றுப்பயணம் சென்றதாக சொல்லப்படுகிறது.
SBI வங்கியில் மறு சீரமைக்கப்பட்ட FD வட்டி விகிதங்கள் (₹2 கோடிக்கும் குறைவாக) மே 15 முதல் அமலானது. அதன் விவரம்.
*7-45 நாள்கள் – மக்களுக்கு 5%, மூத்த குடிமக்களுக்கு 5.75% வட்டி.
*46-129 நாள்கள் – மக்களுக்கு 6.25%, மூத்த குடிமக்களுக்கு 6.75% வட்டி.
*180-210 நாள்கள் – மக்களுக்கு 6.6%, மூத்த குடிமக்களுக்கு 7.1% வட்டி.
*211 நாள்கள் – ஒரு வருடம் வரை – மக்களுக்கு 6.25%, மூத்த குடிமக்களுக்கு 6.75% வட்டி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இம்மாதம் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில், இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் 24ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீடித்து கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கணிப்புகள், திமுக கூட்டணி, பாஜக கூட்டணியை சுற்றியே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அக்கட்சி தொண்டர்கள் சுணங்கியுள்ள நிலையில், 5 முதல் 10 இடங்கள் வரை வெல்ல முடியுமென இபிஎஸ் திடமாக நம்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நாடே எதிர்நோக்கியுள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்தி திமுகவுக்கு உளவுத்துறையும், அக்கட்சிக்கு வேண்டப்பட்ட தனியார் நிறுவனமும் ரிப்போர்ட் அளித்துள்ளன. அதில் திமுக கூட்டணிக்கு 35 தொகுதி வரை கிடைக்கும் என கூறப்பட்டிருப்பதாகவும், சட்டப்பேரவைத் தேர்தலில் பல நெருக்கடிகள் இருக்குமென கூறப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
2014 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, 75 வயதானோருக்கு பதவியில்லை என்ற விதி பாஜகவில் மோடியால் கொண்டு வரப்பட்டு, அத்வானி உள்ளிட்டோர் ஓரங்கட்டப்பட்டனர். அதே விதியை சுட்டிகாட்டி, 75 வயதாக போகும் மோடி பிரதமராக மாட்டார், அமித் ஷாதான் பிரதமராவார் என கெஜ்ரிவால் கூறியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அவர் என்ன செய்ய போகிறார் என்பதை காண நாடே காத்திருக்கிறது.
சென்னை ஐஐடி-எம் சார்பில் இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று மாலை நடந்தது. இதில் பங்கேற்ற இளையராஜா கூறியதாவது, இசை என் உயிர் மூச்சைப் போன்றது என்றும், இசையமைப்பது தனக்கு மூச்சு விடுவதைப் போல் இயல்பானது எனவும் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி 2014 முதல் 2022 வரை விதிகளை மீறி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக நிதி பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ₹7 கோடி நிதி பெற்றுள்ளதாகவும், இதில் FCRA, RPA, IPC விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர்களின் மின்னஞ்சலின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளுக்கு, தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் கடந்த 2ஆம் தேதி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்தது. அதனை ஆராய்ந்த மதிப்பீட்டு குழு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என மே 10ஆம் தேதி பரிந்துரைத்தது. இதையடுத்து ஆவணங்களை சரிபார்த்த தமிழக அரசு, அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.