India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழரான வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்து ஒடிஷாவில் பிரதமர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், கோயிலின் பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது மோடி சுமத்தலாமா?, தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் எனக் கூறுவது தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? என்று முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ப்ரமோஷனை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், அனிருத் இசையமைத்துள்ள “பாரா…” என்ற முதல் பாடலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, அதற்கான ப்ரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நியூசிலாந்து முன்னாள் கேப்டனும் CSK அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃப்ளெமிங்க்-ஐ இந்திய அணிக்கு பயிற்சியாளராக்க விரும்புகிறது பிசிசிஐ. ஆனால், அப்பணிக்கு அவர் விண்ணப்பிக்கவே இல்லை. ஆகையால், அவரை விண்ணப்பிக்க வைக்க தோனியின் உதவியை பிசிசிஐ நாடுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தோனியும், ஃப்ளெமிங்கும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தோனியின் மூலம் அவரை அணுகவுள்ளது பிசிசிஐ.
ராகுல் சமீபத்தில் ஓட்டல் ஒன்றில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சாப்பிடும் வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது X பக்கத்தில் பதிவிட்டு, “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என ராகுல் காந்தியைப் புகழ்ந்துள்ளார். பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை என அதிமுக கூறி வந்த நிலையில், ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என அதிமுக மறைமுகமாக தூது விடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 11.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொருளாதார நிபுணர் ட்ரின் நுயென் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும், அனைத்து மக்களுக்கும் வேலைகளை உருவாக்கும் வேகம் போதவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத அளவில் சவாலாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் இர்ஃபான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்த அவர், சிசுவின் பாலினத்தை யூடியூப் சேனலில் அறிவித்தார். வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் விளை நிலங்களில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானா, மகாராஷ்டிராவில் அதிகப்படியான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. மொத்த நிலப்பரப்பில் காடுகள் 20%, விளை நிலங்கள் 56%ஆக இருக்கும் நிலையில், 2010 & 11ஆம் ஆண்டில் எடுத்த செயற்கைகோள் படங்களுடன் ஒப்பிட்டால் 11% மரங்கள் அழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அகமதாபாத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில், குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தவும், பாஜக, RSS தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. இலங்கையை சேர்ந்த 4 தீவிரவாதிகளும் தமிழ் மட்டுமே பேசியுள்ளனர். வேறுமொழி அவர்களுக்கு தெரியவில்லை. இதனால், தமிழ் தெரிந்த அதிகாரி உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இடுக்கி மாவட்டம் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கேரள அரசு கட்டுகிறது. கடந்த மூன்று நாள்களாக இந்த விவகாரம் தமிழ்நாட்டில் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேரள அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அனுமதி பெறவில்லை என்றால், அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.